எஸ்.எஸ்.ராஜமெளலி சேலஞ்சை ஏற்று கொண்ட பிரபல ஹீரோ!

  • IndiaGlitz, [Tuesday,April 21 2020]

இந்த கொரோனா விடுமுறை நேரத்தில் திரையுலக பிரபலங்கள் இடையே வீட்டு வேலைகளை செய்து பெண்களுக்கு உதவும் #BetheREALMAN என்ற சேலஞ்ச் பரவி வருகிறது என்பதும், இதன்படி பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் சந்தீப் ரெட்டியின் சேலஞ்சை ஏற்று கொண்ட பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி தன்னுடைய வீட்டை சுத்தம் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி, இந்த டாஸ்க்கை தனது ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் நாயகர்களான ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் தேஜா ஆகியோர்களுக்கு ஃபார்வேர்டு செய்தார். இந்த சேலஞ்சை ஏற்று கொண்ட ஜூனியர் என்.டி.ஆர் இன்று வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் வீடு சுத்தம் செய்வது, பாத்திரங்கள் துடைப்பது, தோட்டம் சுத்தம் செய்வது ஆகியவை குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த சேலஞ்சை சீனியர் தெலுங்கு நடிகர்களான சிரஞ்சீவி, நாகார்ஜூனா, வெங்கடேஷ் மற்றும் இயக்குனர் கொரட்டலா சிவா ஆகியோர்களுக்கு ஜுனியர் என்.டி.ஆர், ஃபார்வேர்ட் செய்துள்ளார். ஜூனியர் என்.டி.ஆரின் இந்த வீடியோவுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது,
 

More News

இந்தியாவில் கொரோனா ஏற்படுத்தியிருக்கும் புதிய சிக்கல்!!! கவலையில் இந்திய மருத்துவக் கழகம்!!!

வளரும் நாடுகளில் கொரோனா பரிசோதனையின் அளவு மிகவும் குறைவாக இருக்கிறது.

சிலர் ஏன் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்??? காரணங்களை வெளியிட்ட சென்னை விஞ்ஞானிகள்!!!

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட SGRF என்ற தனியார் மரபணு ஆய்வுக்கூடத்தில் இந்தியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சில விஞ்ஞானிகள்

எய்ட்ஸ் நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்போய் கொரோனா கசிந்தது… நோபல் பரசுபெற்ற விஞ்ஞானி கருத்து!!!

பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற மருத்துவர் லூக் மாண்டாக்னியர் கொரோனா வைரஸ் வுஹான் நகரத்து ஆய்வகத்தில் இருந்து வெளியானது எனக் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

வடகொரியா அதிபருக்கு அறுவை சிகிச்சை: உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்

அமெரிக்காவுடன் அணு ஆயுத சோதனை விவகாரத்தில் அவ்வப்போது மோதி வரும் வடகொரியா அதிபருக்கு சமீபத்தில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் இதனையடுத்து அவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும்

ராகவா லாரன்ஸ் கொடுத்த அடுத்த ரூ.50 லட்சம்: யாருக்கு தெரியுமா?

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்கனவே கிட்டத்தட்ட ரூபாய் 4 கோடி அளவிற்கு ராகவா லாரன்ஸ் நிதியுதவி செய்துள்ளார் என்பது தெரிந்ததே. முதல் கட்டமாக அவர் ரூபாய் மூன்று கோடி