சீனியரை முந்திய ஜூனியர்...! குமரியில் விஜய்வசந்துக்கு குவியும் ஆதரவுகள்...!
- IndiaGlitz, [Saturday,April 03 2021]
காங்கிரஸ் சார்பாக களமிறங்கும் விஜய்வசந்த் காலில் வீக்கமிருந்தும், மக்களிடையே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலோடு, கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலும் நடைபெற இருக்கிறது. இங்கு காங்கிரஸ் சார்பாக விஜய் வசந்த்-ம், பாஜக சார்பாக பொன்ராதாகிருஷ்ணனும் களமிறங்குகிறார்கள். மநீம மற்றும் பிற கட்சிகள் இங்கு களமிறங்கினாலும், தீவிர போட்டி காங்-பாஜகவுக்கும் தான்.
ஜூனியரான இவர், பாஜகவின் பொன்.ராதா கிருஷ்ணனை எதிர்த்து முதன் முதலாக களமிறங்குகிறார். இவர்கள் இருவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே கன்னியாகுமரி தொகுதி பெரும் பரபரப்பில் இருந்து வருகிறது. ஆனால் கருத்துக்கணிப்புகளுக்கு முன்பிலிருந்தே விஜய்வசந்த்-க்கு ஆதரவுகள் இருப்பது செய்திகள் மூலம் தெரிய வருகிறது.
இதற்கு வேறு சில காரணங்களும் உள்ளது. ராதாகிருஷ்ணன் நல்ல தலைவராக இருந்தாலும், பாஜகவின் எதிர்ப்பு அலை தமிழகம் முழுவதும் இருப்பதால், கன்னியாகுமரியிலும் நெகட்டிவ் கருத்துக்களே நிலவி வருகின்றது.
அதுமட்டுமில்லாமல் விஜய் வசந்திற்கு தொகுதியில் நல்ல பெயர் உள்ளது. காரணம் இவர் மக்களுக்காக ஏராளமான நன்மைகளை செய்துள்ளார். இவர் தகப்பனார் வசந்த குமாரும் தொகுதிக்காக செய்த காரியங்களை தமிழகமே அறியும். மேலும் இவர் குமரி துறைமுகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால், மக்கள் வாக்குகள் இவருக்கு சாதகமாக இருப்பதாகவே தெரிகிறது.
மேலும் விஜய் வசந்த் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் எந்த திட்டத்தையும் நான் கொண்டு வர மாட்டேன் என்றும் உறுதியளித்துள்ளார். கட்சிக்காக தொண்டர்கள் பலரும் உறுதியோடு பணி எடுத்து செய்து வருகிறார்கள் என்பது முக்கியமானது. மக்கள் ஆதரவும் இவருக்கு கிடைக்கும் என்பதால், காலில் வீக்கமிருந்தும் விஜய் பிரச்சாரங்களுக்கு சென்று வருகிறாராம். மேலும் வாக்குகள் சேகரிக்கும்போது பெண்கள், வியாபாரிகள் உட்பட பலரும் இவருக்கு ஆதரவு தெரிவிக்கிறார்களாம். சாதிமத சார்பாக வரும் ஓட்டுக்களும் விஜய்க்கு சாதமாக உள்ளதால், வெற்றி வாய்ப்பு இவருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.