close
Choose your channels

விஜய்சேதுபதியின் 'ஜூங்கா' அசத்தலான ஓப்பனிங் வசூல்

Monday, July 30, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி, சாயிஷா நடிப்பில் கோகுல் இயக்கிய 'ஜூங்கா' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி சமூக வலைத்தளங்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பெரும்பாலான முன்னணி ஊடகங்கள் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் சென்னை ஓப்பனிங் வசூல் அபாரமாக இருந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. கடந்த வாரயிறுதி நாட்களில் இந்த படம் சென்னையில் 19 திரையரங்குகள்ல் 244 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.1,70,91,126 வசூல் செய்துள்ளது. இந்த படத்திற்கு திரையரங்குக்களில் 90% பார்வையாளர்கள் குவிந்துள்ளதே இந்த படத்தின் நல்ல ஓப்பனிங் வசூலுக்கு சான்றாக உள்ளது.

தமிழ் சினிமாவுக்கு டார்க் காமெடி படங்கள் புதியது என்பதால் இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான படமாக தெரிகிறது. விஜய்சேதுபதி, யோகிபாபுவின் நடிப்பு, பாரீஸ் நகரின் அழகு படமாக்கப்பட்ட விதம் ஆகியவை இந்த படத்தின் பிளஸ் என விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment