விஜய்சேதுபதியின் ஜூங்கா டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,June 08 2018]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்து கொண்டிருக்கும் பல படங்களில் ஒன்று 'ஜூங்கா. விஜய்சேதுபதியே தயாரித்து வரும் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இம்மாதம் 13ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும், அதே நாளில் இந்த படத்தின் டிரைலரும் ரிலீசாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி செய்திதான்

சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு பாடலாசிரியர் லலிதா ஆனந்த் பாடல்களை எழுதியுள்ளார். விஜய்சேதுபதி, சாயிஷா, மடோனா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை 'இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தை இயக்கிய இயக்குனர் கோகுல் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு டட்லி ஒளிப்பதிவும், சாபு ஜோசப் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர்.
 

More News

கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் புதிய அப்டேட்

கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ள 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 'படைக்கிறவன் மட்டும் கடவுள் இல்லை ! பயிருடுறவனும்  கடவுள்தான்'

'காலா' படத்தில் வசனம் எழுதிய தாராவி இளைஞன்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் "காலா" திரைப்படம்  பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்களையும் பெற்றுவருகிறது.

நான் சொன்னதை விஜய் மில்டன் சீரியஸாக எடுத்து கொண்டார்: 'கோலி சோடா 2' நாயகி 

இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கோலி சோடா 2' திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் நாயகி சுபிக்ஷா,

சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகும் சூப்பர் ஹிட் படத்தின் மூன்றாம் பாகம்

கோலிவுட் திரையுலகில் தற்போது ஒரு படத்தின் இரண்டாம் பாகம் என்பது சர்வசாதாரண நிகழ்வாகிவிட்டது.

ரஜினி ஒரு சகல 'காலா' வல்லவர்: தமிழிசை செளந்திரராஜன் பாராட்டு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் நேற்று வெளியான 'காலா' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள