ஜுன்- ரேஷன் பொருட்கள் வழங்குவதில் மாற்றம்… வெளியான புது அறிவிப்பு!

  • IndiaGlitz, [Tuesday,June 01 2021]

தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நாட்களில் ரேஷன் கடைகள் அனைத்தும் காலை 8-12 மணி வரை இயங்கும் எனத் தமிழக அரசு அறிவித்து பொருட்களை விநியோகம் செய்து வந்தது. இந்நிலையிலல் ஜுன் மாதத்தில் வழங்கப்படும் அனைத்து ரேஷன் பொருட்களுக்கும் டோக்கன் முறை பின்பற்றப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

முன்னதாக நலத் திட்டங்களை வழங்கும்போது டோக்கன் முறை பின்பற்றப்பட்டது. தற்போது அதே முறையைப் பின்பற்றி ரேஷன் பொருட்கள் வழங்கப்பட இருக்கிறது. இதனால் ஜுன் மாத ரேஷன் பொருட்களை வழங்குவதற்காக 1-4 ஆம் தேதி வரை வீடு வீடாகச் சென்று அதிகாரிகள் டோக்கன் வழங்குவார்கள். அடுத்து ஜுன் 5 ஆம் தேதி முதல் அவர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தங்களது ரேஷன் பொருட்களைச் சென்று பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் கொரோனா பரவலை முழுமையாகக் குறைக்க முடியும் என்றும் தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்து உள்ளது. மேலும் ஆன்லைனில் ரேஷன் பொருட்களை ஆர்டர் செய்வோர்களுக்கு காலை 7-6 மணிவரை பொருட்கள் விநியோகம் செய்யப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.

முன்னதாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரணத் தொகை ரூ.2,000 வழங்கப்பட்டது. அதையடுத்து தற்போது 13 சமையல் பொருட்கள் அடங்கிய பை வழங்கப்பட இருப்பதாகவும் அதோடு மீண்டும் ரூ.2,000 நிவாரணத் தொகை வழங்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை தமிழக அரசு விரைவில் அறிவிக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப் படுகிறது.