ஆரவ்வை தொவைச்சு காயப் போட்ருவேன்: ஜூலியின் ஆத்திரம் ஏன்?

  • IndiaGlitz, [Thursday,July 27 2017]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வில்லியாக கிட்டத்தட்ட செயல்பட்டு வரும் ஜூலி, யாரையாவது குற்றம் சொல்லி கொண்டிருப்பதையே பிழைப்பாக கொண்டு வருகிறார். இதுவரை ஓவியாவை பற்றி அனைவரிடமும் குறை சொல்லி வந்த ஜூலி, தற்போது ஓவியாவிடம் நெருக்கமாக பழகும் ஆரவ்வை குறை சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

சற்று முன்னர் வெளிவந்த இன்றைய நிகழ்ச்சியின் புரமோ வீடியோவில் 'ஆரவ்வின் பெரிய மைனஸே அவன் ஓவியா கூட சேர்ந்ததுதான் என்று ஜூலி சொல்ல அதற்கு ரைசா, 'அது மைனஸ் இல்லைம்மா அதுதான் அவனுக்கு பெரிய ப்ளஸ்' என்று கூறுகிறார். அதற்கு ஜூலி, 'அப்படீன்னும் நீ நினைக்கிறியா, அப்படி இருந்தா அவனை தொவைச்சு காயப்போட்டிருவேன்' என்று ஆத்திரத்துடன் கூறுகிறார். பிக்பாஸ் வீட்டில் ஜூலி கொஞ்சம் கொஞ்சமாக தனித்து விடப்படுவதால் அவருடைய ஆத்திரம் அதிகமாகி கொண்டே வருவது இதன் மூலம் உறுதியாகிறது.

இந்த நிலையில் இந்த வாரம் ஆரவ் அல்லது ஜூலி இரண்டு பேரில் ஒருவர் வெளியேற வாய்ப்பு உள்ளதாக சக்தி கூறுகிறார். ஆனால் இந்த வாரம் எலிமினேஷனே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஒரு ஆண்மகன் எப்படி இருக்க வேண்டும்: ஓவியா

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில வாரங்களாகவே ஓவியாவுக்கு மவுசு அதிகரித்து கொண்டே வருகிறது...

ஊழல் அரசியல்வாதிகளுக்கு கமல்ஹாசனின் தைரியமான விளக்கம்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாகவே ஆளும் கட்சியின் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை பரபரப்புடன் கூறி வருகிறார்...

'நானா தானா வீணா போனா' சூர்யாவின் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யா, கீர்த்திசுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சூர்யாவின் பிறந்த நாளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது....

மாஸ் படம்: விக்ரம் வேதா படத்திற்கு சூப்பர் ஸ்டார் பாராட்டு

புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் கடந்த வெள்ளி அன்று வெளியான 'விக்ரம் வேதா' திரைப்படத்திற்கு ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் ரசிகர்கள் கொடுத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக நல்ல வசூலை பெற்று வருகிறது...

ரூ.50 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு. டிஐஜி ரூபாவுக்கு நோட்டீஸ்

சொத்துகுவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்று பெங்களூரு பார்ப்பன அக்ராஹர சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் பெற்று சிறப்பு சலுகைகள் வழங்கியதாக கர்நாடக சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா, கர்நாடக சிறைத்துறை டிஜிபியாக இருந்த சத்யநாராயணராவ் மீது புகார் கூறியிருந்தார்.