பணத்தை எடுத்து கொண்டு கிளம்புகிறாரா ஜூலி? எத்தனை லட்சம் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் ஜூலி பணத்தை எடுத்துக்கொண்டு அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற வாய்ப்பு இருப்பதாக வெளிவந்திருக்கும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் கடைசி நேரத்தில் பணப்பெட்டி வழங்கப்படும் என்பதும் அதில் குறிப்பிட்டுள்ள தொகையை எடுத்துக் கொண்டு ஒரு போட்டியாளர் வெளியேறலாம் என்பது பிக்பாஸ் கொடுக்கும் வாய்ப்பு என்பதும் தெரிந்ததே.
கடந்த முறை அதாவது பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் பிக்பாஸ் கொடுத்த 12 லட்சம் ரூபாய் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு போட்டியில் இருந்து சிபி வெளியேறினார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் போட்டியாளர்களுக்கு அதுபோன்ற ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முதலில் மூன்று லட்சத்திலிருந்து தொடங்கிய பணப்பெட்டியின் மதிப்பு 6 லட்சம், 7 லட்சம் என கடைசியில் 8 லட்சத்தில் வந்து நின்று உள்ளது. அந்த பணப்பெட்டியை ஜூலி கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் காட்சி இன்றைய புரொமோ வீடியோவில் வெளியாகி இருப்பதை அடுத்து அவர் எட்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#BBUltimate இல்லத்தில் இன்று..
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) March 30, 2022
▶ 8 pm Onwards..#Day59 #Promo4 #NowStreaming only on #disneyplushotstar pic.twitter.com/x3r1BYbKmG
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments