ஜூலியை வெளியே அனுப்ப விரும்பும் ஸ்ருதிஹாசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதலில் ஜூலி வந்தபோது, நெட்டிசன்கள் அவருக்கு அமோக ஆதரவு அளித்தனர். ஜூலையை ஃபேக் ஃபேக் என்று கூறியதால் தான் ஆர்த்தியை ரசிகர்கள் வெளியே அனுப்பினர்.
ஆனால் ஆர்த்தி கூறியது முழு உண்மை என்பது அடுத்த வாரமே ரசிகர்களுக்கு புரிந்தது. காயத்ரியுடன் சேர்ந்து கொண்ட ஜூலி, ஓவியாவை செய்யும் டார்ச்சர், பேசுவதெல்லாமே கிட்டத்தட்ட பொய் என ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கிடைத்த பெயரை அவரே டேமேஜ் ஆக்கிக்கொண்டார்.
இந்த நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்ட்டில் ஓவியா, வையாபுரியுடன் ஜூலியின் பெயரும் உள்ளது. ஓவியா எத்தனை முறை எலிமினேஷன் லிஸ்ட்டில் இருந்தாலும் ஓவியாவின் ஆர்மியினர் அவரை காப்பாற்றுவது உறுதி, அதுமட்டுமின்றி அவர்தான் வின்னர் என்பது அனைவரும் முடிவு செய்துவிட்ட ஒன்று.
இந்த நிலையில் இந்த வாரம் வெளியேற போவது ஜூலியா, வையாபுரியா என்ற கேள்வியில் பலர் ஜூலியைத்தான் வெளியேற்ற துடிக்கின்றனர். பழம்பெரும் நடிகை ஸ்ரீப்ரியா தன்னுடைய டுவிட்டரில், 'வெளியே போகப்போறீங்க ஜூலி' என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவை நடிகை ஸ்ருதிஹாசன் லைக் செய்து ஆமோதித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனின் மகளே ஜூலி வெளியே போக விரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments