மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்ட ஜூலி
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் ஜூலி சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு நானும் ஒரு கட்சி தொடங்க போகிறேன் என்றும் அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தார்.
ஏற்கனவே வாக்காளர்களின் எண்ணிக்கையை விட கட்சிகளின் எண்ணிக்கை அதிகமாகிவிடுமோ என்ற கவலையில் பொதுமக்கள் இருந்து வரும் நிலையில் ஜூலியின் இந்த அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இந்த நிலையில் ஜூலி தற்போது மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஒரு ஓட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய், எல்லோர் வீட்டிற்கும் இலவச வாஷிங் மிஷின் மற்றும் ஏசி. ஒவ்வொரு வீட்டிற்கும் ஆயிரம் லிட்டர் தண்ணீர் இலவசம். அதுமட்டுமின்றி டாஸ்மாக், குழந்தைகளுக்கு உயர்தர கல்வி, பொதுமக்களுக்கு உயர்தர மருத்துவம் என வாக்குறுதி கொடுக்கும் ஒரு கட்சி வந்தால் எப்படி இருக்கும்?
தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகள் தரும் வாக்குறுதிகளை பதவிக்கு வந்த பிறகு நிறைவேற்றாவிட்டாலும் நாம் எந்த கேள்வியும் கேட்பது இல்லையே என்று கூறிய ஜூலி, நானும் புதியதாக ஒரு கட்சி தொடங்கி ஆயிரம் வாக்குறுதிகளோடு உங்களை சந்திக்க போகிறேன் என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
ஜூலியின் இந்த வீடியோவிற்கு வழக்கம்போல் நெட்டிசன்கள் திட்டியும் கலாய்த்தும் கமெண்ட் அளித்து வருகின்றனர்.
நாம் மேலும் மேலும் வாக்குறுதிகளை போர்க்களத்தில் நாம் சந்திக்கலாம் #tamilnadu pic.twitter.com/J96951hpwT
— maria juliana (@lianajohn28) May 13, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments