ஆரவ்-ஜூலி காதலை அம்பலப்படுத்திய ஆர்த்தி
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் உள்ள பங்கேற்பாளர்களில் ஜூலிக்கும் ஆர்த்திக்கும் ஆரம்பத்தில் இருந்தே ஆகாது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மத்திய, மாநில அரசை விமர்சித்த ஜூலிக்கு அதிமுக ஆதரவாளரான ஆர்த்தி கண்டனம் தெரிவித்ததில் இருந்தே பிரச்சனை தொடங்கிவிட்டது.
இவ்வாறு பிரச்சனைக்குரிய இருவரையும் மீண்டும் பிக்பாஸ் உள்ளே அனுப்பியது மறுபடியும் பிரச்சனையை உண்டாக்கவா? என்று அனைவரும் நினைத்த நிலையில் அது தற்போது உண்மையாகிவிட்டது.
சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் ஜூலியை ஆர்த்தியும் காஜலும் மாறி மாறி கலாய்த்ததால் ஜூலி அப்செட் ஆகிவிட்டார். குறிப்பாக 'நீ யாருன்னு எனக்கு தெரியும், நான் யாருன்னு உனக்கு தெரியும், நம்ம ரெண்டு பேரையும் ஊருக்கே தெரியும்' என்று கூறி ஜூலியை ஆர்த்தி கலாய்த்தது இன்றைய நிகழ்ச்சியை பார்க்க தூண்டும் என்று கருதப்படுகிறது.
மேலும் ஆரவ் மீதான காதல் குறித்து ஜூலியிடம் காஜல் கேட்டபோது ஆரவ்வை பார்த்தவுடன் எனக்கு அப்பா ஃபீலிங் வந்தது என்று ஜூலி கூறினார். அப்போது ஆர்த்தி கொடுத்த பர்மான்ஸை பார்த்து பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்கள் மட்டுமின்றி நமக்கும் சிரிப்பு வருகிறது. அசிங்கப்படுவது என்பது ஜூலிக்கு கைவந்த கலை தான் என்பதால் ஆச்சரியப்பட முடியவில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com