ஜூலியின் திடீர் அம்மன் அவதாரம் ஏன் தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,June 01 2018]

ஜல்லிக்கட்டு மற்றும் பிக்பாஸ் மூலம் பிரபலம் அடைந்த ஜூலி, ஏற்கனவே அனிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அவர் நடித்து கொண்டிருக்கும் இன்னொரு படம் 'அம்மன் தாயே. இந்த படத்தில் ஜூலி அம்மனாக நடிக்கின்றார். மகேஷ்வரன் மற்றும் சந்திரஹாசன் இரட்டையர்கள் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கிறிஸ்துவ பெண்ணான ஜூலி, அம்மன் வேடத்தை ஏற்க முதலில் தயங்கியதாகவும் பின்னர் இயக்குனர்கள் கொடுத்த நம்பிக்கையில் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறியுள்ள ஜூலி, இந்த படத்தில் அம்மனாக நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பின்போது உண்மையிலேயே விரதம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அம்மன் குறித்து தனது இந்து தோழிகளிடம் கேட்டு தெரிந்து கொள்வதாகவும், கிறிஸ்துவராக இருந்தாலும் இந்த படத்தில் தன்னுடைய 100% ஈடுபாட்டை வெளிப்படுத்தவுள்ளதாகவும் ஜூலி கூறியுள்ளார்.

அதிக பொருட்செலவில் கிராபிக்ஸ் காட்சிகளுடன் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கர்நாடகாவில் 'காலா' வெளியாகுமா? முதல்வர் குமாரசாமி பதில்

 ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் 7ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தை கர்நாடகத்தில் திரையிட கர்நாடக திரைப்பட வர்த்தசபை தடை விதித்துள்ளது.

எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் மனு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு பதிவை தனது முகநூலில் பதிவு செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.

சமூக விரோதிகள் விவகாரம்: ரஜினி மீது வழக்கு தொடர நாம் தமிழர் கட்சி முடிவு

தூத்துகுடி போராட்டம் கலவரமாக மாற சமூக விரோதிகளே காரணம் என்றும், போலீசை சமூக விரோதிகள் அடித்ததால் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் என்றும் சமீபத்தில் ரஜினிகாந்த் அளித்த பேட்டி

சரத்குமாரிடம் 'யார் நீங்க' என்று ஏன் கேட்கவில்லை: சந்தோஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தூத்துகுடி சென்றிருந்தபோது சந்தோஷ் என்ற வாலிபர் அவரை பார்த்து 'யார் நீங்க' என்று கேள்வி எழுப்பினார்.

என் நோக்கத்தை மீடியா திரித்துவிட்டது: 'யார் நீங்க" கேள்வி கேட்ட சந்தோஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தூத்துகுடி சென்று அங்கு துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்தோஷ் எ