ராய்லட்சுமி நடித்த 'ஜூலி 2' சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவல்

  • IndiaGlitz, [Tuesday,September 12 2017]

கோலிவுட் நடிகை ராய்லட்சுமி அறிமுகமாகியுள்ள பாலிவுட் திரைப்படமான 'ஜூலி 2' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழியிலும் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ள இந்த படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் டிரைலரை பார்த்த அனைவருமே கண்டிப்பாக இந்த படத்திற்கு 'ஏ' சர்டிபிகேட் தான் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருப்பார்கள். அந்த எதிர்பார்ப்பின்படியே இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் எந்தவித கட்'டும் செய்யாமல் 'ஏ' சர்டிபிகேட் அளித்துள்ளனர்

இந்த நிலையில் சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டதை அடுத்து இந்த படம் வரும் அக்டோபர் 6ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராய்லட்சுமி, ரவி கிஷான், ஆதித்ய ஸ்ரீவத்சவா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை தீபக் ஷிவ்தஸ்னி இயக்கியுள்ளார்.