உடுமலை சங்கர் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி திடீர் மரணம்

  • IndiaGlitz, [Thursday,January 25 2018]

தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கிய சம்பவம் உடுமலையில் சங்கர் என்ற இளைஞர் கெளரவக்கொலை செய்யப்பட்ட சம்பவம். இந்த கொலை வழக்கில் சங்கரின் மனைவி கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி உள்பட ஆறு பேர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த சரித்திர சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வழங்கியவர் திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன் என்பவர்

இந்த நிலையில் நீதிபதி அலமேலு நடராஜன் அவர்களுக்கு இன்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சையின் பலனின்றி அவர் மரணம் அடைந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

நீதிபதி அலமேலு நடராஜன் அவர்களது மறைவுக்கு சக நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.