'கபாலி' வழக்கில் திரையுலகினர்களுக்கு நீதிபதி கூறிய அறிவுரை

  • IndiaGlitz, [Saturday,July 16 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தை திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தாக்கல் செய்த மனுவை நேற்று நீதிபதி கிருபாரன் விசாரணை செய்து சம்பந்தப்பட்ட இணையதளங்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும், இணையதளங்கள் இந்த படத்தை பதிவேற்ற தடை செய்தும் உத்தரவிட்டார்.
ஆனால் அதே நேரத்தில் நீதிபதி, திரையுலகினர்களுக்கும் சில அறிவுரைகளை கூறியுள்ளார். திரைப்படங்கள் சமூகத்தை பெரும் அளவில் தாக்கம் ஏற்படுத்தும் துறை என்பதால் முன்னணி கதாநாயகர்கள் இதுகுறித்து சிந்தித்து பார்க்கவேண்டும் என்றும் நடிகர்கள், சினிமாவில் மதுகுடிப்பது, சிகரெட்டு பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிப்பதை தவிர்க்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
முன்பு எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் போன்ற நடிகர்கள் தங்கள் ரசிகர்களுக்கு நல்லொழுக்கத்தை சொல்லிக் கொடுக்கும் விதமாக நடித்து, சமுதாயத்தில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை உருவாக்கியதாக குறிப்பிட்ட நீதிபதி, தற்போதுள்ள சூழ்நிலையில், சமுதாயத்தில் நடக்கும் பல குற்றங்களுக்கு, சினிமாதான் காரணம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று வருத்தத்துடன் தனது கருத்தை பதிவு செய்தார்.
முன்னணி கதாநாயகர்கள் தங்களது திரைப்படத்தில் இருந்து கிடைக்கும் வருமானத்தை மட்டும் கணக்கில் கொள்ளாமல் தங்களுடைய திரைப்படம் தவறான தகவல்களை சமுதாயத்துக்கு சொல்லும் விதமாக இருக்கக்கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கவேண்டும் என்றும் அவர் அறிவுரை கூறினார்.

More News

'கவலை வேண்டாம்' படக்குழுவினர்களின் முக்கிய அறிவிப்பு

சமீபத்தில் ஜீவா நடிப்பில் வெளியான 'போக்கிரி ராஜா' எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் அவர் தற்போது நம்பியிருப்பது 'கவலை வேண்டாம்'

கபாலி'யில் கலக்கும் பவர்புல் பெண்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' திரைப்படத்தின் காய்ச்சல் உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு பரவியுள்ள நிலையில் இந்த படம் ரஜினியை மட்டுமே குறிவைத்து புரமோஷன் செய்யப்பட்டு வருகிறது...

முதலில் 'தக்காளி சோறு' அப்புறம் 'சொப்பன சுந்தரி'

விக்ரம்பிரபு நடிப்பில் உருவாகியுள்ள 'வீரசிவாஜி' படத்தில் இடம்பெற்ற 'தாறுமாறு தக்காளி சோறு' சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளிவந்து நல்ல...

'கபாலி' தயாரிப்பாளரின் இரண்டாவது வழக்கு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு நேற்று சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார் என்றும் அந்த மனுவில் தான் தயாரித்திருக்கும் 'கபாலி'...

சூர்யாவின் 'S3' வியாபாரம் தொடங்கிவிட்டதா?

கோலிவுட்டின் மாஸ் நடிகர்களில் ஒருவராகிய சூர்யா தற்போது 'S3' படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ஹரியின்...