ஹர்பஜன்சிங் லாஸ்லியா படத்தில் இணைந்த பிரபல தயாரிப்பாளர்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்கும் முதல் திரைப்படம் ’பிரண்ட்ஷிப்’ என்றும் இந்த படத்தில் பிக்பாஸ் லாஸ்லியா நாயகியாக நடிக்கவிருக்கிறார் என்ற செய்தியும் வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
அது மட்டுமின்றி இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் பிரபல தயாரிப்பாளர் ஜே.எஸ்.கேசதீஷ் என்பவர் நடிக்க இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்பஜன்சிங், லாஸ்லியா நடிக்கும் படத்தில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் இணைந்திருப்பது இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
Happy to announce my next in ?? #Friendship starring @harbhajan_singh @akarjunofficial #Losliya @shamsuryastepup Super cool team ???? @JPRJOHN1 pic.twitter.com/1AlTUP2nuV
— J Satish Kumar (@JSKfilmcorp) March 5, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com