பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட விபரீதம்.. இன்று ரிலீஸ் ஆன படத்தின் திரையரங்கில் தீ விபத்து..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்த "தேவாரா" திரைப்படம் இன்று வெளியான நிலையில், ரசிகர்களின் ஆர்வக்கோளாறில் பட்டாசு வெடித்ததில், தியேட்டர் முன் வைக்கப்பட்டிருந்த ஜூனியர் என்டிஆர் கட்-அவுட் தீக்கிரையாகியது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூர் நடித்த "தேவாரா" திரைப்படம் அனிருத் இசையில் உருவானது. இப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி, ஆந்திர மாநிலங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைதளங்களிலும் இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால், இப்படம் சூப்பர் ஹிட் வெற்றியாகும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று அதிகாலை முதலே ஹைதராபாத் உள்பட சில நகரங்களில் திரையரங்குகள் ரசிகர்களால் நிரம்பியிருந்தன. ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில் ரசிகர்கள் "தேவாரா" படத்தின் வெளியீட்டை பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது பட்டாசு வெடித்ததில், அருகிலிருந்த ஜூனியர் என்டிஆர் கட்-அவுட் தீப்பற்றி எரிந்தது, இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக திரையரங்கு ஊழியர்களும், அந்த பகுதியில் இருந்த மக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். தீயணைப்பு துறையினர் சிறிது நேரத்தில் வந்து தீயை முழுமையாக கட்டுப்படுத்தினர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், சில மணி நேரம் பதட்டம் நிலவியது.
Fans Burning NTR Cutout Outside Hyderabad Theatre after the Initial Poor Ratings & Bad Talk for the Movie #Devara ! pic.twitter.com/QGzykbUZfW
— Raees🚁 (@RaeesHere_) September 27, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments