பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட விபரீதம்.. இன்று ரிலீஸ் ஆன படத்தின் திரையரங்கில் தீ விபத்து..!

  • IndiaGlitz, [Friday,September 27 2024]

பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்த தேவாரா திரைப்படம் இன்று வெளியான நிலையில், ரசிகர்களின் ஆர்வக்கோளாறில் பட்டாசு வெடித்ததில், தியேட்டர் முன் வைக்கப்பட்டிருந்த ஜூனியர் என்டிஆர் கட்-அவுட் தீக்கிரையாகியது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூர் நடித்த தேவாரா திரைப்படம் அனிருத் இசையில் உருவானது. இப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி, ஆந்திர மாநிலங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைதளங்களிலும் இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால், இப்படம் சூப்பர் ஹிட் வெற்றியாகும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று அதிகாலை முதலே ஹைதராபாத் உள்பட சில நகரங்களில் திரையரங்குகள் ரசிகர்களால் நிரம்பியிருந்தன. ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில் ரசிகர்கள் தேவாரா படத்தின் வெளியீட்டை பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது பட்டாசு வெடித்ததில், அருகிலிருந்த ஜூனியர் என்டிஆர் கட்-அவுட் தீப்பற்றி எரிந்தது, இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக திரையரங்கு ஊழியர்களும், அந்த பகுதியில் இருந்த மக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். தீயணைப்பு துறையினர் சிறிது நேரத்தில் வந்து தீயை முழுமையாக கட்டுப்படுத்தினர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், சில மணி நேரம் பதட்டம் நிலவியது.

 

More News

'எஸ்டிஆர் 48' படம் என்ன ஆச்சு? வெற்றி பட இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு..!

சிம்பு நடிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகயிருந்த 'எஸ்டிஆர் 48' படம் இன்னும் தொடங்காத நிலையில், சிம்பு வேறு ஒரு இயக்குனரின் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்பதால் பரபரப்பு

மீண்டும் இயக்குனர் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத்? ஹீரோ யார் தெரியுமா?

இயக்குனர் விஜய் இயக்கத்தில், ஏற்கனவே "தலைவி" என்ற திரைப்படத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்து இருந்த நிலையில், தற்போது மீண்டும் அவரின் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க

கார் ரேஸ்-க்கு தயாராகும் அஜித்.. சூப்பர் வீடியோ வைரல்..!

நடிகர் அஜித் மீண்டும் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்ள இருப்பதாகவும், இது குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

பிரபல நடிகரின் படத்தில் வில்லன்களாக நடிக்கும்  நட்சத்திர ஜோடி.. யார் அவர்கள்?

பிரபல நடிகரின் படத்தில் பாலிவுட் திரையுலகின் நட்சத்திர ஜோடி வில்லன்களாக நடிக்க இருப்பதாக கூறப்படும் செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகள்கள் வைத்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. நடிகை பூஜா குமார் க்யூட் பதிவு..!

நடிகை பூஜா குமார் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, "மகள்கள் வைத்திருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்