பிரதீப்பை போடா வாடா என்று கூறும் ஜோவிகா .. பயங்கர வாக்குவாதம்..! பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு..!

  • IndiaGlitz, [Thursday,October 12 2023]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருப்பவர்களில் மிகவும் குறைந்த வயதுடைய ஜோவிகா சக போட்டியாளர் பிரதீப்பை பார்த்து போடா வாடா என்று பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக் ஹவுஸ், ஸ்மால் ஹவுஸ் என்று பிரித்ததில் இருந்து இரு வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு இடையே சர்ச்சைகள் சண்டைகள் வந்து கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று காலை முதல் புரோமோவில் வேலை செய்ய முடியாது என திடீரென ஸ்மால் ஹவுஸில் இருப்பவர்கள் போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான புரமோவில் நாங்கள் ஆறு பேர் மட்டும் கஷ்டப்பட்டு சமைத்துக் கொண்டிருக்கிறோம், அதை குறை வேறு சொல்கிறீர்களா என பிரதீப் ஆவேசம் அடைகிறார். அப்போது ஜோவிகா, சமைப்பது உன் வேலை, அதை நீ செய்துதான் ஆக வேண்டும் என்று கூறுகிறார்.

அதுக்காக நீ என்னை அடிமை மாறி நடத்துவியா என பிரதீப் கேட்க, ’சரிடா சரிடா என் சாப்பாட்டை நான் வேஸ்ட் பண்ணுகிறேன் என்று வைத்துக்கொள், அதற்காக நீ சமைக்க மாட்டேன் என்று எப்படி கூறலாம், சமைப்பது தாண்டா உன் வேலை, அதற்காகத்தான் நீ உன் வீட்டில் இருக்கிறாய்’ என்று என் பிரதீப் கேட்க அதனால் பிரதீப் ஆத்திரமாகிறார். இதனால் பிக் பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.