இந்த சீசனே வேஸ்ட்.. மாயாவிடம் கூறிய ஜோவிகா .. அப்செட் ஆன தினேஷ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நீங்க மட்டும் இந்த சீசனில் இல்லை என்றால் இந்த சீசனே வேஸ்ட் என்று கூறிய ஜோவிகா, நீங்கள் அர்ச்சனாவிடம் நெருங்கி பழகுவது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது எலிமினேஷன் ஆன போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று ஜோவிகா வரும் காட்சி புரமோ வீடியோவில் உள்ளது. அவர் முதலாவது தினேஷை சந்தித்து, ‘நீங்கள் ஒரு தனிப்பட்ட பிளேயர் என்றால் அது இல்லை, உங்களை பார்க்கும் போது நீங்கள் தனியாக விளையாடுவது போல் தெரியவில்லை. ஒரு டீம் மாதிரி தான் தெரிகிறது. தினேஷ் என்று தனியாக பேசுவதற்கு எதுவுமே நடக்கவில்லை’ என்று கூறுகிறார்
இதனை அடுத்து மாயாவிடம் செல்லும் ஜோவிகா ’உங்க மேல ஒரு கோபம். இங்கே எல்லோரும் உங்களை என்னென்னவெல்லாம் பேசினார்கள், ஆனால் நீங்கள் அர்ச்சனாவை கட்டிப்பிடிச்சுகிட்டு இருக்கீங்க. உங்களை வெளியே போக முயற்சி செய்த அவங்களையெ நீங்க கூட வைத்திருக்கிறீர்கள், சத்தியமா சொல்றேன் மாயா, நீங்க இந்த சீசனில் இல்லை என்றால் இந்த சீசனே வேஸ்ட்’ என்று ஜோவிகா கூறுவதுடன் இன்றைய புரமோ முடிவு வருகிறது
தினேஷை டீம் என்று கூறிய ஜோவிகா, தப்பித்தவறி கூட மாயாவை டீம் என்று சொல்லாமல் அவருக்கு ஆதரவாக ஜால்ரா அடிப்பதை பார்த்து, பார்வையாளர்கள் இன்னும் ஜோவிகா திருந்தவே இல்லை என கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்,.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com