close
Choose your channels

'குக் வித் கோமாளி 5' நிகழ்ச்சியில் ஜோவிகா? வனிதா கூறிய ஆச்சரியமான பதில்..!

Monday, March 25, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஒரு சில திரை நட்சத்திரங்கள் மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படும் நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் இந்த நிகழ்ச்சியில் தனது மகள் ஜோவிகா கலந்து கொள்வது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

இன்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வந்த நிலையில் ஒரு ரசிகர் ’குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் ஜோவிகாவை எதிர்பார்க்கலாமா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு பதிலளித்த வனிதா விஜயகுமார் ’ஜோவிகா தற்போது பிஸியாக இருப்பதாகவும், அதனால் அவர் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்றும் ஆனால் என்னை நீங்கள் எதிர்பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார்.

வனிதாவின் இந்த பதில் தான் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பொருத்தவரை ஒரு சீசனில் போட்டியாளராக வந்தவர் இன்னொரு சீசனில் போட்டியாளராக கலந்து கொள்ள முடியாது என்பது விதியாக உள்ளது. வனிதா குக் வித் கோமாளி சீசன் 1ல் கலந்து கொண்டு டைட்டில் வின்னரான நிலையில் அவர் எப்படி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒரு சில எபிசோடுகளில் சிறப்பு நிகழ்ச்சியில் மட்டும் முந்தைய போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்ற நிலையில் அதைத்தான் வனிதா கூறுகிறாரா? அல்லது ஆங்கராக வருவாரா? என்று புரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment