பிரகாசமாக எரியும் அணைய போகிற விளக்கு.. கடைசி நேரத்தில் ஆவேசமாக சண்டை போட்ட ஜோவிகா ..!

  • IndiaGlitz, [Friday,December 01 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் ஜோவிகா வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அணைய போற விளக்கு கடைசி நேரத்தில் பிரகாசமாக எரிவது போல் கடைசி நேரத்தில் அவர் திடீரென ஆவேசமாக ரவீனாவிடம் சண்டை போடுவதாக இன்றைய மூன்றாவது புரோமோ வீடியோவில் உள்ள காட்சிகள் குறித்து பார்வையாளர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஜோவிகா ஆரம்பத்தில் சில நாட்கள் சூப்பராக விளையாடினார். எந்த கேங்கிலும் அகப்படாமல் தனித்து விளையாடிய அவர், படிப்பு குறித்த விஷயத்தில் திடீரென விமர்சனம் செய்யப்பட்டார்.
அதன் பிறகு மாயா மற்றும் பூர்ணிமா குரூப்பில் இணைந்து பிரதீப்புக்கு ரெட் கார்டு காட்டியதற்கு பின் தனது தனித்தன்மையை இழந்து விட்டதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தனர். இதனை அடுத்து அவர் தூங்கிக் கொண்டிருக்கும் காட்சிகளும் ஒளிபரப்பப்பட்டன,

இந்த நிலையில் தற்போது அவர் திடீரென ஆவேசமாக ரவீனாவிடம் சண்டை போடுகிறார். ’என் வீட்டுக்கு போறேன், அம்மாவோட இருக்கேன், கேங் கேங் என்று சொல்லி சும்மா கடுப்பேத்திக்கிட்டு இருக்காங்க, நிஜமாகவே என்னை கேங்கில் ஒருவராக நினைத்துக் கொண்டு என்னென்னமோ சொல்றாங்க, எனக்கு தேவையா இது’ என்று ரவீனாவிடம் கூறினார்.

அதற்கு ரவீனா ‘நான் உங்களை பார்த்து சொல்லல’ என்று கூற ’உங்களுடைய எமோஷன் அப்படின்னா, என்னோட எமோஷன் அப்படித்தான் இருக்கும் ரவீனா’ என்று கூற ’நீங்கள் அப்படி நினைத்துக் கொண்டால் நான் எதுவும் பண்ண முடியாது’ என்று கூற கையெடுத்து கும்பிட்ட ஜோவிகா ’ஓகே தாயே’ என்று கூறுவதுடன் இன்றைய புரோமோ முடிவுக்கு வருகிறது.

மொத்தத்தில் ஜோவிகா நீண்ட நாட்களுக்கு பிறகு ஆவேசமாக பேசி உள்ளார். அதேபோல் ரவீனா வரவர சக போட்டியாளர்களை கடுப்பேற்றி வருகிறார். ஏற்கனவே நேற்று அர்ச்சனாவை கடுப்பேற்றிய நிலையில் இன்று ஜோவிகாவை கடுப்பேற்றி உள்ளதை அடுத்து அவருக்கு நெகட்டிவிட்டி அதிகரித்து வருகிறது.