ஜோவிகாவுக்கு இவ்வளவு கோபம் வருமா? விசித்ராவுடன் ஆவேசமாக பேசியதால் பரபரப்பு..!
- IndiaGlitz, [Friday,October 06 2023]
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று ஐந்தாவது நாளாக நடைபெற்று வரும் நிலையில் முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர் என்பதை பார்த்தோம். குறிப்பாக கேப்டன் விஜய் அடிப்பேன் உதைப்பேன் என்று பேசிய இன்றைய முதல் புரமோ பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இரண்டாவது ப்ரோமோவில் விசித்ரா மற்றும் ஜோவிகா ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் உள்ளன.
ஜோவிகா கடந்த நான்கு நாட்களாக அமைதியாக இருந்தார், ஒரு சில போட்டியாளர்கள் ஏன் இவ்வளவு அமைதியாக இருக்கிறீர்கள், ஜாலியாக பேசுங்கள் என்றும் தெரிவித்திருந்தார்கள். ஆனால் இன்று அவர் ஆவேசப்பட்டதை பார்க்கும்போது இவரா இத்தனை நாள் அமைதியாக இருந்தார்? என்ற ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது.
இன்று விசித்ரா பேசிய போது ஜோவிகாவின் கல்வி விஷயத்தில் நான் தலையிடவில்லை, இங்கு நான் சொல்ல வருவது என்னவென்றால் அடிப்படை கல்வி அனைவருக்கும் வேண்டும் என்று தான் கூறினேன் என்று கூறினார்.
அப்போது திடீரென குறுக்கிட்ட ஜோவிகா ‘எல்லோரும் படித்து விட்டு தான் பெரிய ஆளாக வேண்டும் என்ற அவசியம் இல்லை, என்று கூற இடையில் விசித்ரா குறுக்கிட, நான் பேசிக்கொண்டிருக்கும் போது நீங்கள் அமைதியாக இருங்கள் என்ற ஆத்திரமாக பேசி ’படிப்பு என்ற விஷயம் நிறைய குழந்தைகள் தப்பான விஷயங்கள் இருக்கின்றன, அவர்களின் பிரதிநிதியாகத்தான் நான் இங்கே வந்திருக்கிறேன் என்று கூறினார்.
அப்போது விசித்ரா, ‘ என்ன வேண்டுமானாலும் பேசுவது சுதந்திரம் அல்ல கூற, ‘அதற்கு ஜோவிகா நான் இப்போது என்ன தப்பாக பேசிவிட்டேன் என்று கூற ஜோவிகாவுக்கு ஆதரவாக சக போட்டியாளர்கள் அனைவரும் கைதட்டி ஆதரவு தெரிவித்தனர்.
ஜோவிகா இந்த ஆவேசத்தை பார்க்கும்போது அவரது அம்மா வனிதா நன்றாக ட்ரைனிங் கொடுத்து தான் பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பி உள்ளதாக தெரிகிறது என கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.
#Day5 #Promo2 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) October 6, 2023
Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/eIDUZyAyUT