கடும் சோதனையில் பூத்த கனவு… பரதநாட்டியத்தில் கலக்கும் திருநங்கை பொன்னி!

  • IndiaGlitz, [Tuesday,May 02 2023]

கலை எல்லோருக்கும் சமமானது என்று சாதித்து காட்டியிருக்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த திருநங்கை பொன்னி. திருநங்கையாக இருந்து பல்வேறு சோதனைகளுக்கு இடையே தான் கற்றுக்கொண்டிருக்கும் கலையைத் தற்போது இலவசமாக அனைவருக்கும் கற்றுக்கொடுக்கவும் துவங்கியிருக்கிறார்.

தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்தவர் பொன்னி. சிறுவயது முதலே படிப்பு, கணிதம் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த இவருக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து பரதநாட்டியத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இதற்காக 8 ஆம் வகுப்பு பயிலும்போது அருகில் இருந்த ஒரு நடனப்பள்ளியில் சேர்ந்து கொள்வதற்கு ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் அவரிடம் காணப்பட்ட பாலின வேறுபாட்டைக் கண்ட ஆசிரியர்கள் பொன்னியைத் தட்டிக் கழித்திருக்கின்றனர். ஆனாலும் முயற்சியைக் கைவிடாத பொன்னிக்கு துவக்க பயிற்சியை அளித்தனர். இப்படியே பரதநாட்டியத்தில் கால்பதித்த பொன்னி 2008 இல் சென்னைக்கு வந்திருக்கிறார்.

அதுவரைக்கும் சட்டை, பேண்ட் அணிந்திருந்த பொன்னி தனக்கிருந்த பாலின வேறுபாட்டை முழுவதுமாக ஒப்புக்கொண்டு சேலை அணியத் துவங்கியிருக்கிறார். இதனால் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்ததாகக் கூறும் பொன்னி பரதநாட்டியம் பயில்வதற்காக பல இடங்களில் அலைந்து திரிந்திருக்கிறார். ஆனால் யாரும் இவருக்கு பரதநாட்டியம் கற்றுக்கொடுக்க முன்வராத நிலையில் கணிதத்தின் மீதிருந்த ஆர்வம் காரணமாக பிஎஸ்சி படிக்கத் துவங்கியிருக்கிறார். ஆனாலும் பொருளாதாரத்தில் நொடிந்துபோன அவர் மூட்டை தூக்கியே தனது வாழ்க்கையை வாழ்ந்ததாகக் கூறுகிறார்.

இந்நிலையில் கீழே விழுந்து காலை உடைத்துக்கொண்ட பொன்னிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. இதனால் படிப்பை தொடரமுடியாமல் அவதிப்பட்டிருக்கிறார். இதையடுத்து ஒருவழியாகத் தனது கலைத்தேடலை துவங்கிய பொன்னிக்கு திருவான்மியூரைச் சேர்ந்த நட்டாச்சாரிய சிவக்குமார் என்பவர் அடைக்கலம் கொடுத்து முறையாகப் பரதம் கற்றுக்கொடுத்ததோடு பொருளாதார ரீதியாகவும் உதவிச் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் பரதத்தில் எம்.ஏ படிக்கும் அளவிற்கு உயர்ந்த பொன்னி தற்போது பல மேடைகளில் தனது கலைத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அதோடு ஊர், ஊராகச் சென்று தனக்கிருக்கும் கலைத் திறமையை மக்கள் முன்னிலையில் கவனப்படுத்தி வருகிறார். இதனால் திருநங்கைகள் குறித்து மக்களின் பார்வையை மாறும் என்றும் கூறிவருகிறார்.

மேலும் 2 மாணவர்களுடன் இலவசமாக பரதப் பயிற்சியைத் துவங்கிய அவர் தற்போது 32 மாணவர்களுக்கு பரதத்தைக் கற்றுக்கொடுக்கும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார். பரதநாட்டியம் மீது ஆர்வம் காட்டிய பொன்னி தற்போது தனது கனவில் சாதனை படைத்ததோடு ஒட்டுமொத்த திருநங்கைகளுக்கும் ஒரு நம்பிக்கை வழியைக் காட்டியிருக்கிறார் என்பதே நிதர்சனம்.

More News

கை கொடுத்தது தப்பா? மைதானத்திலேயே மோதிக்கொண்ட விராத் கோஹ்லி மற்றும் கௌதம் காம்பீர்..!

நேற்றைய ஐபிஎல் போட்டி முடிவடைந்ததும் மைதானத்திலேயே பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் லக்னோ அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் ஆகிய இருவரும் மோதிக்கொண்ட வீடியோ இணையதளங்களில்

'பொன்னியின் செல்வன் 2' வசூல் இத்தனை கோடியா? படக்குழுவினர்களின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் கடந்த வெள்ளி அன்று வெளியானது என்பதும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாசிட்டிவ் விமர்சனம்

கால்களை இவ்வளவு உயரத்துக்கு தூக்க முடியுமா? பிரபல நடிகையின் வேற லெவல் வீடியோ..!

பிரபல பாலிவுட் நடிகை கால்களை தூக்கி கவர்ச்சியில் மூழ்கடிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இவ்வளவு உயரமாக ஒருவர் கால்களை தூக்க முடியுமா என ஆச்சரியமாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

விஜய் சேதுபதி இல்லாமல் 'சூது கவ்வும் 2': மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!

விஜய் சேதுபதி நடித்த 'சூது கவ்வும்' திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

திடீரென சிவகார்த்திகேயனை வாழ்த்திய அமீர்கான்.. காரணம் இதுதானா?

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் திடீரென சிவகார்த்திகேயன் படத்திற்கு வாழ்த்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.