இந்த தந்திரத்தை வேற எங்காவது காட்டுங்க: வைரமுத்துக்கு பதிலடி கொடுத்த பெண் பத்திரிகையாளர்
Send us your feedback to audioarticles@vaarta.com
வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் ஊடகங்களில் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. எதற்கெடுத்தாலும் முந்தி கொண்டு கருத்து சொல்லும் ஒருசிலர் இந்த விஷயம் குறித்து மெளனமாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் கடந்த இரண்டு நாட்களாக வைரமுத்து-சின்மயி விஷயம் டிரெண்டில் உள்ளது.
இந்த நிலையில் இன்று முதல் முதலாக மெளனம் கலைத்த வைரமுத்து தனது டுவிட்டரில், 'அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்' என்று கூறியுள்ளார். அதாவது புகழ்பெற்றவர்கள் மீது குற்றஞ்சாட்டும் அநாகரீகம் தொடர்வதாக வைரமுத்து கூறியுள்ளார்.
வைரமுத்துவின் இந்த கருத்துக்கு பதில் கூறிய பிரபல பெண் பத்திரிகையாளர் ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் 'உங்கள் மீது குற்றச்சாட்டு கூறிய பெண்ணும் பிரபலமானவர்தான் என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம். இந்த டிரிக்கையெல்லாம் வேறு எங்காவது யூஸ் பண்ணுங்க சார்' என்று பதிலடி கொடுத்துள்ளார்.
Vairamuthu clearly forgets that the person accusing him is also famous and one with pure talent. So inda trick vere engeyaavathu use pannunga sir
— Dhanya Rajendran (@dhanyarajendran) October 10, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments