close
Choose your channels

கேட்டு வாங்குவதா மரியாதை? டி.ஆரை வெளுத்து வாங்கிய பிரபல பத்திரிகையாளர்

Saturday, September 30, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று நடைபெற்ற 'விழித்திரு' படத்தின் பிரஸ்மீட்டில் தன்ஷிகா பேசும்போது தெரியாமல் டி.ராஜேந்தரின் பெயரை சொல்ல மறந்துவிட்டார். ஒரு சீனியர் நடிகர் என்ற முறையில் அதை யாருடைய மனம் கோணாமல் டி.ராஜேந்தர் அதை சுட்டிக்காட்டியிருக்கலாம். ஆனால் நேற்று டி.ராஜேந்தர் நடந்து கொண்ட விதம் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. டி.ராஜேந்தரை இனி எந்த படக்குழுவினர்களும் விழாவுக்கு அழைப்பார்களா? என்பது சந்தேகம்தான்.

இந்த நிலையில் டி.ஆருக்கு விஷால் உள்பட பலதிரையுலக பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் பிரபல பத்திரிகையாளர் இதுகுறித்து கூறியதாவது:

உங்க பெயரை எதற்கு தன்ஷிகா சொல்லணும் டி.ராஜேந்தர் அவர்களே? ‘ விழித்திரு’ படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியதைத் தவிர உங்கள் பங்கு ஒன்றுமில்லை. நான் படம் பார்த்துவிட்டேன். உங்கள் நினைவு அவருக்கு வராமல் போனது இயல்புதான். இதற்குக் கொஞ்சம்.கூட நாகரிகம் இல்லாத உடல்மொழியோடும், வாய்மொழியோடும் நீங்கள் பேசிய பேச்சு அருவருப்பின் உச்சம். தன்ஷிகா பணிவோடு சீனியர் என்கிற மரியாதையோடு பேசுகிறார். ஒருமுறை கிட்டத்தட்ட குனிந்து கால்களைத் தொட்டு கேட்பதுபோல் மன்னிப்பு கேட்கிறார். ஆனால் திமிர் உங்களுக்கு அடங்கவில்லை. ‘சாரி கட்டிக்கொண்டு வராமல் ஸாரி கேட்கிறாய்’ என்று சொல்கிறீர்கள். உங்க அடுக்குமொழியில் தீய வைக்க…அவங்க என்ன உடையில் வந்தால் உங்களுக்கு என்ன?

கேட்டு வாங்குவதா மரியாதை..? தன்ஷிகா கண்கலங்கும் அளவுக்கு தரந்தாழ்ந்து பேசுகிறீர்கள். இப்படி மேடைக்கு மேடை உளறிவருவதால் தான் உங்கள் மேலிருந்த மரியாதை மக்கள் மத்தியில் போனது. சக கலைஞரை மதிக்கத் தெரியாத, நாகரிகம் அற்ற உங்கள் பெயரை உச்சரிக்காத தன்ஷிகாவுக்கு வாழ்த்துகள்.

உங்களுக்குப் பின்னால் அந்தக் காணொளியில் சில முகங்கள் தெரிந்தன. அம்முகங்களின் சிரிப்பும் கைத்தட்டலும் உங்கள் பேச்சின் அருவருப்புக்கு சற்றும் சளைத்ததல்ல.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment