முதல்வர் வேட்பாளர்கள்- பலம் யாருக்கு? விளக்கும் அரசியல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
பெரும் தலைவர்கள் யாரும் இல்லாது தமிழகத்தில் முதல் முறையாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் பங்குபெறும் சிலர், பல காலமாக அரசியலில் இருந்தாலும் முதல்வர் வேட்பாளர் என்ற அடையாளத்துடன் களம் இறங்குவது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படி இருக்கையில் இதுவரை இருபெரும் திராவிட கட்சிகளே தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் தற்போது புதிய கட்சிகளும் அரசியலில் களம் காண்கின்றன.
அந்த வகையில் தமிழகத்தில் அதிமுக, திமுக, மநீம, நாம் தமிழர் கட்சி, அமமுக எனும் ஐந்து முனை போட்டியில் இதுவரை பெரிய அளவில் பங்குபெறாத பாஜகவும் ஆவேசத்துடன் களம் இறங்கி இருக்கிறது. இதுதவிர காங்கிரஸ் எனும் தேசிய பாரம்பரியமும் சேர்ந்து கொண்டு இருக்கிறது. இப்படி பலமுனை போட்டி நிலவும் தமிழகத் தேர்தலில் எந்த முதல்வர் வேட்பாளருக்கு பலம் அதிகமாக இருக்கிறது. மேலும் முதல்வர் வேட்பாளர்களாக இருக்கும் தலைவர்களின் பலமாகவும் பலவீனமாகவும் பார்க்கப்படும் விஷயங்கள் என்ன என்பது குறித்தும் அரசியல் விமர்சகர் பாரத் நமக்கு பிரத்யேக நேர்காணல் அளித்து உள்ளார்.
அந்த நேர்காணலில் முதல்வர் வேட்பாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின், சீமான், நடிகர் கமல்ஹாசன் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரின் வலிமை தேர்தலில் எப்படி இருக்கிறது? பொது மக்களிடம் இவர்களைப் பற்றி இருக்கும் கருத்துகள் விமர்சனங்கள் என்னென்ன? கொள்கைகளைத் தாண்டி அரசியல் தலைவர்கள் எனும் ஆளுமை எப்படி பார்க்கப் படுகிறார்கள் என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு அரசியல் விமர்சகர் பாரத் அவர்கள் நமக்கு விளக்கம் அளித்து உள்ளார்.
தமிழகச் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் முதல்வர் வேட்பாளர்களில் யாருக்கு பலம் அதிகம் எனும் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் அதிக கவனம் பெற்று இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments