புதுச்சேரி அரசியலில் நடந்தது என்ன? பின்னணியை விளக்கும் அரசியல் பேட்டி!
- IndiaGlitz, [Tuesday,February 23 2021]
புதுச்சேரி மாநிலத்தில் அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி இந்த மாத இறுதியில் அறிவிக்கப்பட இருந்தது. மேலும் வாக்கெடுப்பு வரும் ஏப்ரல் மாதத்தில் நடத்தப்பட்டு புது அமைச்சரவை அமைய இருந்த நிலையில் அந்த அமைச்சரவையில் பதவி வகித்து வந்த சில அமைச்சர்கள் திடீர் திடீர் என்று கட்சியில் இருந்து விலகுகினர். இதனால் தன்னடைய மெஜாரட்டியை நிரூபிக்குமாறு முதல்வர் நாராயணசாமிக்கு நெருக்கடி ஏற்படுகிறது.
இதையொட்டி நேற்று கூட்டப்பட்ட சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு உரையாற்றினார். பின்பு வாக்கெடுப்பு நடைபெறுகிறது. அந்த வாக்கெடுப்பில் மெஜாரட்டி குறைந்து நாராயணசாமி தோல்வி அடைகிறார். இதனால் பொறுப்பு ஆளுநராகப் பதவி ஏற்று இருக்கும் தமிழிசை சௌந்திராஜனை சந்தித்து நாராயணசாமி தன்னுடைய ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.
இதைத்தவிர புதுச்சேரி மாநிலத்தில் சில அரசியல் அழுத்தங்களும் இருந்து கொண்டே வந்தன. அதாவது ஆளுநர் பதவியில் இருந்துவந்த கிரண்பேடி அனைத்து அமைச்சரவை விஷயங்களிலும் தலையிடுகிறார். நிதி ஒதுக்கீட்டிலும் தலையிடுகிறார். முதல்வரை தனித்து இயங்க முடியாமல் நெருக்கடி கொடுக்கிறார் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து ஆளும் கட்சி சார்பில் கூறப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்புதான் முன்னாள் அளுநர் கிரண்பேடி தன்னுடைய பதவியில் இருந்து திடீர் என்று விலகுகிறார்.
அதையொட்டி பொறுப்பு ஆளுநராக தமிழிசை சௌந்திரராஜன் பதவி ஏற்றுக் கொள்கிறார். அதோடு காங்கிரஸ் ஆட்சியும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு கலைக்கப் படுகிறது. இதற்குப் பின்னால் ஒளிந்து இருக்கும் அரசியல் அழுத்தங்களையும் கள நிலவரங்களையும் குறித்து அரசியல் ஆலோசகர் மற்றும் விமர்சகர் அய்யாநாதன் அவர்கள் நமக்கு பிரத்யேகப் பேட்டி அளித்து உள்ளார். தற்போது புதுச்சேரியில் அரசியலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு இருக்கும் நிலையில் இந்த வீடியோ பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி வரவேற்பை பெற்றுள்ளது.