விஜய், அஜீத்தின் முடிவை பார்த்து பயப்படும் திரையரங்கு உரிமையாளர்கள்.. என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஜய் மற்றும் அஜீத் ஆகியோரின் திரையுலக பயணம் குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் பயப்படுவதாக பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்துள்ளார்.
உச்ச நட்சத்திரங்கள் தங்களது திரையுலக பயணத்தை கொஞ்சம் கொஞ்சமாக முடித்துக்கொண்டு பல்வேறு துறைகளில் செல்வதாக அவ்வபோது அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக நடிகர் விஜய் அவர்கள் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கியுள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து திரையுலகில் அவரது இடத்தை நிரப்பப்போகும் ஹீரோ யார் என்பது குறித்து தற்போதே பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பத்திரிகையாளர் அந்தணனிடம் இதுகுறித்து கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் "நடிகர் விஜய் அவர்கள் அரசியலுக்கு சென்று விட்டால் ஒரு பெரிய தொகை பணப்புழக்கம் திரையரங்க வட்டாரத்தில் நின்றுவிடும் என்ற அச்சம் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் உள்ளது. அதே சமயம் அஜித் அவர்கள் ஒரு வருடத்தில் நான்கு படங்கள் நடித்தால் திரையரங்கு உரிமையாளர்கள் சற்று நிம்மதி அடைவார்கள். இருந்தாலும், அஜீத் அவர்களுக்கு அடுத்து மூன்று படங்கள் மட்டுமே வரிசையில் உள்ளதால் தற்போதைய கலக்கம் தொடங்கியுள்ளது. நடிகர்கள் சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு போன்றவர்கள் இவர்கள் விட்டுச் செல்லும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு அடுத்ததாக காத்திருந்தாலும் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்." என பதிலளித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout