விஜய், அஜீத்தின் முடிவை பார்த்து பயப்படும் திரையரங்கு உரிமையாளர்கள்.. என்ன காரணம்?

  • IndiaGlitz, [Saturday,February 17 2024]

நடிகர் விஜய் மற்றும் அஜீத் ஆகியோரின் திரையுலக பயணம் குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் பயப்படுவதாக பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்துள்ளார்.

உச்ச நட்சத்திரங்கள் தங்களது திரையுலக பயணத்தை கொஞ்சம் கொஞ்சமாக முடித்துக்கொண்டு பல்வேறு துறைகளில் செல்வதாக அவ்வபோது அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக நடிகர் விஜய் அவர்கள் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கியுள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து திரையுலகில் அவரது இடத்தை நிரப்பப்போகும் ஹீரோ யார் என்பது குறித்து தற்போதே பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பத்திரிகையாளர் அந்தணனிடம் இதுகுறித்து கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் நடிகர் விஜய் அவர்கள் அரசியலுக்கு சென்று விட்டால் ஒரு பெரிய தொகை பணப்புழக்கம் திரையரங்க வட்டாரத்தில் நின்றுவிடும் என்ற அச்சம் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் உள்ளது. அதே சமயம் அஜித் அவர்கள் ஒரு வருடத்தில் நான்கு படங்கள் நடித்தால் திரையரங்கு உரிமையாளர்கள் சற்று நிம்மதி அடைவார்கள். இருந்தாலும், அஜீத் அவர்களுக்கு அடுத்து மூன்று படங்கள் மட்டுமே வரிசையில் உள்ளதால் தற்போதைய கலக்கம் தொடங்கியுள்ளது. நடிகர்கள் சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு போன்றவர்கள் இவர்கள் விட்டுச் செல்லும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு அடுத்ததாக காத்திருந்தாலும் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். என பதிலளித்துள்ளார்.

More News

கோபித்து கொண்ட ரசிகர்.. 'சென்னைக்கு வா பிரதர்' என சமாதானம் செய்த ஜெயம் ரவி..!

நடிகர் ஜெயம் ரவி மீது அவரது தீவிர ரசிகர் ஒருவர் கோபித்துக் கொண்ட நிலையில் 'சென்னைக்கு வாருங்கள்' என்று அவரிடம் கூறி சமாதானம் செய்த பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'அமரன்' வார்த்தைக்கு என்ன அர்த்தம்? 3 பேருக்கு நன்றி சொன்ன ராஜ்குமார் பெரியசாமி..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தின் டைட்டில் 'அமரன்' என்று நேற்று அறிவிக்கப்பட்டது என்பதும் நேற்று டைட்டில் உடன் வெளியான டீசர்

விஜயகுமார் பேத்தி திருமணம்.. பந்தக்கால், சுமங்கலி பூஜை.. செம்ம ரொமான்ஸ் வீடியோ..!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியா திருமணம் வரும் 19ஆம் தேதி சென்னை அருகே உள்ள பீச் ரிசார்ட்டில் நடைபெற இருக்கும் நிலையில்

'எதிர்பாராததை எதிர்பாருங்கள்': அடுத்த படத்தின் சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட விஷ்ணு விஷால்..!

நடிகர் விஷ்ணு விஷால் தனது அடுத்த படத்தின் சூப்பர் அப்டேட்டை வெளியிட்டுள்ள நிலையில் அது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அரசியல் கட்சி பெயரை மாற்றுகிறாரா விஜய்? புதிய பெயர் என்ன?

தளபதி விஜய் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் தற்போது இந்த கட்சியின் பெயரில் சிறு மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.