ஜோதிகாவை வழியனுப்பி வைத்த 'காற்றின் மொழி' படக்குழுவினர்
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகில் '36 வயதினிலேயே' படத்தின் மூலம் மீண்டும் ரீஎண்ட்ரி ஆன நடிகை ஜோதிகா அதற்கு பின்னர் 'மகளிர் மட்டும்', 'நாச்சியார்' உள்பட ஒருசில படங்களில் நடித்தார். தற்போது மணிரத்னம் இயக்கி வரும் 'செக்க சிவந்த வானம்' மற்றும் ராதா மோகன் இயக்கி வரும் 'காற்றின் மொழி' ஆகிய படங்களில் ஜோதிகா நடித்து வருகிறார்
இந்த நிலையில் 'காற்றின் மொழி' படத்தில் ஜோதிகா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த படத்திற்காக ஜோதிகா இடைவிடாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டு தனது பகுதியின் காட்சிகளை ஒரே ஷெட்யூலில் முடித்து கொடுத்துள்ளார் என்பது குறிப்ப்பிடத்தக்கது. இதனையடுத்து கேக் வெட்டி கொண்டாடி ஜோதிகாவை படக்குழுவினர்கள் வழியனுப்பி வைத்தனர்.
ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்சு, உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான் 'துமாரி சூளு' படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தை ராதாமோகன் இயக்கி வருகிறார். ஏ.எச்.காசிஃப் இசையில் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் ப்ரவீண் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை தனஞ்செயன் தயாரித்து வருகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments