அரசியலுக்கு வருகிறாரா ஜோதிகா? ஏன் ஓட்டு போடவில்லை.. அவரே அளித்த விளக்கம்.!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை ஜோதிகாவிடம் ஏன் ஓட்டு போடவில்லை என்றும் நீங்கள் அரசியலுக்கு வர வாய்ப்பு இருக்கிறதா என்றும் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.
முதல் கட்டமாக தேர்தல் நேரத்தில் அவர் வெளிநாட்டில் இருந்ததால் ஓட்டு போடவில்லை என்ற நிலையில் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டிய உங்களைப் போன்றவர்களே ஏன் ஓட்டு போடவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் ’எப்போதுமே நான் தவறாமல் ஓட்டு போட்டு விடுவேன், ஆனால் எங்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது அல்லவா, சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வெளியூர் சென்றிருந்ததால் ஓட்டு போட முடியவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் ’நீங்கள் அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்று கேட்டபோது ’யாரும் என்னை கூப்பிடவில்லை, எந்த அரசியல் கட்சியும் என்னை அணுகவில்லை, என்று கூறிய ஜோதிகா, ’இப்போதைக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் எதுவும் இல்லை, என்னுடைய இரண்டு குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்களை கவனிக்கவும் என்னுடைய நடிப்புத் தொழிலை கவனிக்கவும் தான் இப்போதைக்கு எனக்கு நேரம் இருக்கிறது, அரசியலுக்கு வர வாய்ப்பு இல்லை’ என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் திருமணத்துக்கு பின்னரும் உடற்பயிற்சி செய்து உடம்பை ஃபிட்டாக வைத்திருப்பது குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்த ஜோதிகா ’உடல் நலத்தை கவனித்துக் கொள்ள வேண்டும், நமக்கு என்று குடும்பம் இருக்கிறது, குழந்தைகள் இருக்கிறார்கள், அவர்களை நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றால் நம்முடைய உடலை நாம் சரியாக பார்த்துக் கொள்ள வேண்டும், அதனால் தான் எனக்கு மட்டுமில்லை எல்லோருக்குமே உடற்பயிற்சி என்பது மிகவும் முக்கியம்’ என்றும் தெரிவித்தார்.
மேலும் தற்போதுள்ள புதிய இயக்குநர்கள் மிகவும் திறமையானவர்களாக இருக்கிறார்கள் என்றும் புதிய நட்சத்திரங்களும் நன்றாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறிய ஜோதிகா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments