'கங்குவா' படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம்.. ஜோதிகாவின் கொந்தளிப்பு பதிவு..!
- IndiaGlitz, [Sunday,November 17 2024]
சூர்யா நடித்த ’கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படத்தின் முதல் காட்சி முடிவடைந்தவுடன் சமூக வலைதளங்களில் நெகட்டிவ் விமர்சனங்கள் பரவியது. இதனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாது என்று கூறப்படும் நிலையில் இந்த படத்தை விமர்சித்தவர்கள் மீது நடிகை ஜோதிகா கொந்தளித்துள்ளார் இது ஒரு அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
நான் இந்த குறிப்பை நடிகை ஜோதிகாவாகவும், சினிமாவை நேசிக்கும் ஒருவராகவும் எழுதுகிறேன், நடிகர் சூர்யாவின் மனைவியாக அல்ல.
கங்குவா – சினிமாவில் ஒரு வியப்பூட்டும் சாதனை. சூர்யா. நீங்கள் ஒரு சிறந்த நடிகராகவும், சினிமாவை முன்னேற்றும் கனவுகளை பயமின்றி காணும் ஒருவராகவும் இருப்பதற்கு மிகவும் பெருமைப்படுகிறேன்,
முதல் அரை மணி நேரம் சரியாக இல்லை என்பதையும் சத்தம் அதிகம் என்பதையும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இந்த குறை முழு 3 மணி நேரத்தில் இருந்து வெறும் முதல் 30 நிமிடங்கள் மட்டுமே.
உண்மையாகச் சொன்னால், இது ஒரு முழுமையான சினிமா அனுபவம். தமிழ் சினிமாவில் இதுவரை காணாத வெற்றி பழனிசாமியின் கேமரா வேலைப்பாடும், செயல்படுத்தலும் அபாரம்.
ஊடகங்களிலும் சில சமூக வலைத்தளத்தில் இருந்து வரும் எதிர்மறை விமர்சனங்கள் என்னை வியப்பில் ஆழ்த்துகின்றன, ஏனெனில் நான் முன்பு பார்த்த மிகப்பெரிய அறிவு குறைவான பெரிய பட்ஜெட் படங்களுக்கு, பழைய கதைகளுடன், பெண்களை துரத்துவது, இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவது, மிகையான ஆக்ஷன் காட்சிகள் போன்றவற்றுக்கு இந்த அளவிலான விமர்சனங்கள் யாரும் செய்யவில்லை.
கங்குவாவின் நல்ல அம்சங்களை என்ன செய்வது? இரண்டாம் பாதியில் ஆக்ஷன் காட்சி மற்றும் கங்குவாவிற்கு இளம்பெண்ணின் காதலும் துரோகமும் போன்றவை? விமர்சனங்களில் அவர்கள் நல்ல பகுதிகளை மறந்துவிட்டதாக நினைக்கிறேன்.
இதெல்லாம் எனக்கு மிகப்பெரிய கேள்வி எழுப்புகிறது, நம்மால் எப்போது உண்மையாகவே இந்த விமர்சனங்களை படிக்கவும் கேட்கவும் நம்பவும் முடியும் என்று! கங்குவா முதல் நாள், முதல் காட்சி முடிவதற்கு முன்பே இவ்வளவு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. இவ்வளவிற்கும் இந்த படம் ஒரு முழுமையான பாராட்டிற்கு தகுதியான படமாக இருந்தபோதும் எதிர்மறை விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கங்குவா குழுவே பெருமைப்படுங்கள், ஏனெனில் எதிர்மறையான கருத்து கூறுகிறவர்கள் சினிமாவை முன்னேற்ற இதைத் தவிர வேறொன்றும் செய்து கொண்டிருப்பதில்லை!