'தளபதி 68' படத்தில் இருந்து வெளியேறினாரா ஜோதிகா? அவருக்கு பதில் இவரா?

  • IndiaGlitz, [Wednesday,August 30 2023]

தளபதி விஜய் நடித்த 'லியோ’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'தளபதி 68’ படத்தின் தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

விஜய் இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் தந்தை மகன் என்ற இரண்டு வேடத்தில் தந்தை ஜோடியாக ஜோதிகா. மகன் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்த இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ஜோதிகா இந்த படத்தில் நடிக்க முடியாத நிலையில் இருப்பதால் அவருக்கு பதில் வேறு நடிகையை படக்குழுவினர் பரிசீலனை செய்து வந்ததாகவும் தற்போது சிம்ரன் இடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2000-ம் ஆண்டு விஜய் ஜோடியாக 'பிரியமானவளே’ என்ற திரைப்படத்தில் சிம்ரன் நடித்த நிலையில் மீண்டும் விஜய்க்கு ஜோடியாக சிம்ரன் ’தளபதி 68’ படத்தில் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

பாவாடை தாவணியில் அழகு தேவதை.. விஜய் சேதுபதி மகளின் லேட்டஸ்ட் புகைப்படம்..!

நடிகர் விஜய் சேதுபதி தனது குடும்பத்துடன் ஓணம் பண்டிகை கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிய நிலையில், அதில் விஜய் சேதுபதியின் மகள் பாவாடை தாவணியில் அழகு

நடிகர் ஆர்யாவின் அடுத்த படம்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு.. மாஸ் போஸ்டர் ரிலீஸ்..!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யா நடிக்கும் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதோடு, மாஸ் போஸ்டரும் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது

பாராளுமன்ற தேர்தலில் ரஜினியின் ஆதரவு யாருக்கு? அண்ணன் சத்தியநாராயண ராவ் தகவல்..!

ஒவ்வொரு தேர்தல் வரும் போதும் ரஜினியின் ஆதரவு யாருக்கு என ஊடகங்கள் கேள்வி எழுப்புவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த

அறிவிப்புக்கு முன்பே மிகப்பெரிய தொகைக்கு வியாபாரமான சிவகார்த்திகேயன் படம்..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாக முன்னரே அந்த படத்தின்  பாடல்கள் உரிமை மிகப் பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.

ஒரே ஸ்க்ரீனில் ஷாருக்கான் - பிரபாஸ்.. ரசிகர்களுக்கு டபுள் விருந்து..!

ஒரே ஸ்கிரீனில் ஷாருக்கான் மற்றும் பிரபாஸ் தோன்ற வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் ரசிகர்களுக்கு டபுள் விருந்து கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.