ஜோதிகாவின் 'ராட்சசி' சென்சார் மற்றும் ரிலீஸ் தகவல்கள்!

  • IndiaGlitz, [Friday,June 21 2019]

ஜோதிகா நடித்த 'ராட்சசி' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு அரசு பள்ளியின் அவலத்தையும் அந்த அரசுப்பள்ளியை ஒரு பொறுப்புள்ள ஆசிரியை நினைத்தால் தலைகீழாக மாற்றலாம் என்பதையும் அந்த டீசரில் கூறப்பட்டிருந்தது. டீசரே இப்படி என்றால் முழுப்படத்தை பார்த்தால் அதில் கூறப்பட்டுள்ள ஆழமான விஷயம் நிச்சயம் அனைவரையும் கவரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் 'ராட்சசி' படத்தின் சென்சார் தகவல்கள் சற்றுமுன் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் கொடுத்துள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த படம் ஜூலை வெளியீடு என்றும் சரியான ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது

ஜோதிகா, ஹரிஷ் பெராடி, பூர்ணிமா பாக்யராஜ், சத்யன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கவுதம் ராஜ் இயக்கியுள்ளார். சீன் ரோல்டான் இசையில் கோகுல் பினாய் ஒளிப்பதிவில் பிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது
 

More News

'பிகில்' ஃபர்ஸ்ட்லுக்கில் இதையெல்லாம் கவனித்தீர்களா?

விஜய் நடித்து வரும் அடுத்த படத்தின் டைட்டில் 'பிகில்' என சற்றுமுன் வெளியாகிய நிலையில் இந்த படத்தின் டைட்டில் சமூக வலைத்தளங்களில் தெறிக்க வைத்து கொண்டிருக்கின்றது.

இதுதான் 'தளபதி 63' படத்தின் அட்டகாசமான டைட்டில்!

தளபதி விஜய் நடித்து வரும் 63வது படத்தை 'தளபதி 63' என்று கூறுவதை இந்த நிமிடத்தில் இருந்து நிறுத்தி கொள்ளலாம். ஆம், ஏற்கனவே அறிவித்தபடி 'தளபதி 63' படத்தின் அட்டகாசமான டைட்டில் சற்றுமுன் வெளியாகியுள்ளது

சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை தாக்கிய வாலிபர் மரணம்!

கடந்த வெள்ளிக்கிழமையன்று சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை தாக்கி விட்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபர் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்

சந்தானம் நடித்த 'A1' ரிலீஸ் குறித்த தகவல்

நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்த 'தில்லுக்கு துட்டு 2' திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி நல்ல வசூலை பெற்ற நிலையில் அவரது நடிப்பில் உருவான அடுத்த படமான ''A1''

தமிழ்நாடே கடனில் தான் உள்ளது: ஏலம் குறித்து பிரேமலதா விளக்கம்

ரூ.5 கோடி வங்கியில் கடன் வாங்கி திரும்ப கட்டாததால் விஜயகாந்தின் ஒருசில சொத்துக்கள் ஏலம் விடப்படவுள்ளதாக வங்கி ஒன்று இன்றைய நாளிதழில் விளம்பரம் கொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது