close
Choose your channels

ஜோதிகா பட இயக்குனர் விவாகரத்து.. பிரிந்த மனைவியின் விளக்கம்..!

Friday, December 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜோதிகா நடித்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ள நிலையில் அவரது மனைவி இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

ஜோதிகா நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’பொன்மகள் வந்தாள்’. அமேசான் பிரைமில் நேரடியாக ஒளிபரப்பான இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்தது என்பதும் இந்த படத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தை இயக்குனர் ஜேஜே ஃபிரடரிக் என்பவரின் மனைவி தனது சமூக வலைத்தளத்தில் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டதாக கூறியுள்ளார். அதில், ‘நாங்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டோம், எனக்கு எப்போதும் போல் என்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆதரவு கிடைத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் விவாகரத்து என்பது ஒரு தோல்வி அல்ல என்றும் அது அடுத்த கட்டத்திற்கான ஆரம்பம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment