'சந்தானம்' அடுத்த படத்தில் பாடல் பாடும் 'அரபிக்குத்து' பாடகி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சந்தானம் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற ’அரபிக் குத்து’ உட்பட பல சூப்பர் ஹிட் பாடல்கள் பாடிய பாடகி ஜொனிதா காந்தி ஒரு பாடலை பாடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
சந்தானம் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை என் ஆனந்த் என்பவர் இயக்க இருக்கிறார் என்பதும் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படம் உருவாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார். அவர் இந்த படத்திற்காக கம்போஸ் செய்த ஒரு பாடலை ஜொனிதா காந்தி பாடியதாகவும் சமீபத்தில் இந்த பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டதாகவும் இசையமைப்பாளர் டி இமான் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் அறிவித்துள்ளார்.
இந்த பாடலை பாடலாசிரியர் முத்தமிழ் எழுதியுள்ளார். இவர் ஏற்கனவே ஹிப்ஹாப் தமிழா நடித்த ’வீரன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்களை எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பாடல் குறித்து ஜொனிதா காந்தி கூறியபோது, ‘என்ன ஒரு அருமையான பாடல், இந்த பாடலை அனைவரும் விரைவில் கேட்பீர்கள் என்று கூறியுள்ளார். சந்தானம் படத்திற்காக ஜெனிதா காந்தி பாடிய பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments