மெழுகு டாலு நீ…நீ… லேட்டஸ் புகைப்படத்தால் ரசிகர்களைப் புலம்ப வைத்த இளம் பாடகி!
Send us your feedback to audioarticles@vaarta.com
தன்னுடைய வசீகரமான குரலால் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம்வருபவர் ஜோனிடா காந்தி. இவர் பின்னணி பாடகியாக ஏற்கனவே தமிழ் சினிமா ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ள நிலையில் சமீபகாலமாக விதவிதமான போட்டோஷுட் புகைப்படங்களை பதிவிட்டு சோஷியல் மீடியாவில் மேலும் பிரபலமாகி வருகிறார்.
இந்தி சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமான ஜோனிடா தற்போது தமிழ், தெலுங்கு, குஜராத்தி, பெங்காலி எனப் பல மொழிகளில் பல்வேறு ஹிட் பாடல்களை பாடி வருகிறார். இசையமைப்பளார் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பல்வேறு இந்தி பாடல்களைப் பாடியதன் மூலம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற இவர் தொடர்ந்து தமிழில் ‘ஓகே கண்மனி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மென்டல் மனதில்’, ‘சர்க்கார்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஓஎம்ஜி பொண்ணு’, ‘டாக்டா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘செல்லம்மா செல்லம்மா’ எனப் பல ஹிட் பாடங்களைப் பாடியுள்ளார்.
மேலும் அனிருத் இசையமைப்பில் இவர் பாடிய ‘அரபிக்குத்து’ பாடல் பாடகி ஜோனிடா காந்தியை வேறலெவல் வைரலாக்கியது. மேலும் இந்தப் பாடல் வெளியீட்டின்போது இவரை வீடியோக்களிலும் புகைப்படங்களிலும் பார்த்த தமிழ் ரசிகர்கள் உண்மையில் இவர் நடிகையா? என்ற சந்தேகத்தையும் எழுப்பி இருந்தனர்.
அந்த அளவிற்கு பாடகி ஜோனிடா தன்னுடைய குரலில் மட்டுமல்ல தோற்றத்திலும் படு வசீகரமாக ரசிகர்களை ஈர்த்து வருகிறார். இந்நிலையில் சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருந்துவரும் பாடகி ஜோனிடா அவ்வபோது புது போட்டோஷூட் புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைத் தளப் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது மெழுகுசிலை போலவே இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் அவர் பாடிய செல்லம்மா செல்லம்மா பாடலில் இடம்பெற்ற மெழுகு டாலு நீ என்று அவரது புகைப்படத்திற்கு கமெண்ட்ஸ்களைப் பதிவிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments