'ஜோக்கர்' குருசோமந்தரம் நடித்த அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Wednesday,July 25 2018]

இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் குருசோமசுந்தரம் நடித்த 'ஜோக்கர்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் தேசிய விருதினையும் பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் குருசோமசுந்தரம் தற்போது ஜதின் மற்றும் நிஷாந்த் ஆகியோரின் இயக்கத்தில் விஜய் மூலன் அவர்களின் தயாரிப்பில் உருவாகி வரும் ஓடு ராஜா ஓடு என்ற காமெடி திரில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நாசர் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் லட்சுமி பிரியா, ஆனந்த் சாமி, ஆஷிகா சால்வன், வினோத், ரவீந்திர விஜய், வெங்கடேஷ் ஹரிநாதன், கே.எஸ்.அபிஷேக், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் மற்றும் தீபக் பாகா உள்பட பலர் நடித்துள்ளனர்.

தோஷ் நந்தா இசையமைத்துள்ள இந்த படம் 'ஜோக்கர்' போன்றே வெற்றியும் விருதும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் 3வது முறையாக இணையும் நலன் குமாரசாமி

இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர் ஆகிய பரிணாமங்களில் கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வருபவர் நலன்குமாரசாமி. இவர் இயக்கிய 'சூது கவ்வும்' மற்றும் 'காதலும் கடந்து போகும்

'விஸ்வரூபம் 2' படத்தின் ஆச்சரியமான ரன்னிங் டைம்

கமல்ஹாசன் நடித்து இயக்கிய 'விஸ்வரூபம்' திரைப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு மிகப்பெரிய தடைகளை தாண்டி ரிலீஸ் ஆகி பெரும் வெற்றி பெற்றது

ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா சாயிஷா?

விஜய் இயக்கிய 'வனமகன்' படத்தில் அறிமுகமான சாயிஷா, அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஒப்பந்தமானார்.

இதற்காகத்தான் படபூஜையில் கலந்து கொள்வதில்லை: சமந்தா

பிரபல நடிகை சமந்தாவுக்கு இந்த ஆண்டு அதிர்ஷ்டகரமான ஆண்டு என்றே கூறலாம்.

மீண்டும் விஜய்யுடன் இணையும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்?

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் கடந்த ஆண்டு தனது 100வது தயாரிப்பு திரைப்படமாக விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தை