close
Choose your channels

'சூர்யா 44' படத்தில் இவர்களும் நடிக்கிறார்களா? அந்தமான் புகைப்படம் வைரல்..!

Thursday, July 4, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக அந்தமான் தீவுகளில் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. இந்த வாரத்துடன் அந்தமானில் ’சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் என்றும் அதன் பின் சென்னை திரும்பும் படக்குழுவினர் அடுத்த கட்டமாக ஊட்டிக்கு படப்பிடிப்பிற்காக செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்தமானில் நடக்கும் படப்பிடிப்பில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில் ஜோஜு ஜார்ஜ் தனது சமூக வலது பக்கத்தில் ’சூர்யா 44’ படத்தில் தன்னுடன் நடிப்பவர்களுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். அந்த படத்தில் மேலும் சிலர் இந்த படத்தில் நடித்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ் உடன், இயக்குனர் மற்றும் நடிகர் தமிழ், பிரேம், ராமச்சந்திர துரைராஜ் ஆகியோர் உள்ளதை அடுத்து இவர்கள் மூவரும் இந்த படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே முதல் முறையாக நடிக்கும் இந்த படத்தில் ஏற்கனவே சுஜித் சங்கர், ஜெயராம் ,கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பதாக செய்திகள் வெளியானது. 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார் என்பதும் இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.