குழந்தைகளுக்கு கேன்சர்.. ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் ரூ.5,365 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். நீதிமன்றம் உத்தரவு..!

  • IndiaGlitz, [Saturday,February 08 2020]

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்பான பேபி பவுடரை பயன்படுத்தியதால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 4 பேருக்கு சுமாா் ரூ.5,365 கோடி இழப்பீடு அளிக்கவேண்டும் என்று அமெரிக்காவின் நியூ ஜொ்ஸி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் குழந்தைகளுக்கான பவுடர், ஆயில் மற்றும் சோப் போன்ற பொருட்களைத் தயாரித்து வருகிறது. ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடரால் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்பட்டதாக அமெரிக்காவில் 4 பேர் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், குழந்தைகளுக்கான பவுடரில் புற்றுநோய் ஏற்படுத்தக் கூடிய அஸ்பெஸ்டாஸ் கலந்திருப்பதாக 16,000-க்கும் அதிகமான புகாா் மனுக்கள் அந்த நிறுவனத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கை, மத்திய அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கிறது. வழக்கு விசாரணையில், ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடரில் ஆஸ்பெஸ்டாசின் அம்சங்கள் இருப்பதால் அது புற்றுநோயை உண்டாக்கும் அபாயம் உள்ளது என்றும், வாடிக்கையாளர்களிடம் இது தொடர்பாக எந்தவித அறிவிப்பையும் செய்யவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதற்காக ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு நியூ ஜெர்சி நீதிமன்றம் சுமார் 5,365 கோடி ரூபாயை (750 மில்லியன் அமெரிக்க டாலர்) அபராதமாக விதித்துள்ளது.

இந்நிலையில், இது தொடர்பான குற்றச்சாட்டுகளை ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் மறுத்துள்ளது. தவறான விபரங்களின் அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டதாகவும், இதனை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

More News

சூரரை போற்று இசை வெளியீட்டு விழா: தமிழ் திரையுலகில் இதுதான் முதல்முறை

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், ஜீவி பிரகாஷ் இசையமைப்பில் உருவாகிய 'சூரரைப்போற்று' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது

சார்ஸ் வைரஸ் பாதிப்பினை மிஞ்சியது கொரோனா வைரஸ் – சீனாவில் 722 பேர் உயிரிழப்பு

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் இதுவரை 722 பேர் இறந்துள்ளர். இந்த பாதிப்பு கொரோனா வைரஸ் தொகுதியான சார்ஸ் வைரஸ் பாதிப்பை விட அதிகமானது ஆகும்.

அனுஷ்காவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அனுஷ்கா நடித்த 'பாகுபலி 2' திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டும், அதன் பின்னர் 2018ல் பாகமதி என்ற திரைப்படமும் வெளிவந்தது. அதன்பின்னர் கடந்த இரண்டு வருடங்களாக

'தர்பார்' நஷ்டம் பிரச்சனை குறித்து ஆர்.கே.செல்வமணி கருத்து

ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் நஷ்டம் ஏற்பட்டதாக ஒரு சில விநியோகஸ்தர்கள் கூறிவரும் நிலையில் இது குறித்து கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஆர்கே செல்வமணி கூறியதாவது:

'மாஸ்டர்' படப்பிடிப்பால் நெய்வேலி மக்களுக்கு கோடிக்கணக்கில் வருமானம்: ஆர்.கே.செல்வமணி

விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வருவதால் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு கோடிக்கணக்கில் வருமானம் வந்து கொண்டிருப்பதாகவும்