குழந்தைகளுக்கான ஜான்சன்& ஜான்சன் பவுடர் புற்றுநோயை ஏற்படுத்துவதாகக் குற்றச்சாட்டு!!! விற்பனை நிறுத்தம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுவதும் குழந்தைகளுக்கு பாதுகாப்பானது எனக் கருதப்பட்ட ஜான்சன்& ஜான்சன் உற்பத்திப் பொருட்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. இந்நிறுவனத்தின் டால்கம் பவுடர் புற்றுநோயை உண்டாக்கும் தன்மையுடையது என அமெரிக்காவில் மட்டும் 16 ஆயிரம் வாடிக்கையாளர்கள் வழக்குத் தொடர்ந்து உள்ளனர். இதையடுத்து இந்நிறுவனத்தின் மீது போடப்பட்டுள்ள பல்லாயிரக் கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதும் கவனிக்கத் தக்கது.
முன்னதாக இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், வாடிக்கையாளர்களுக்கு பலநூறு கோடி டாலர்களை நிவாரணத் தொகையாக வழங்கவேண்டும் என தீர்ப்பளித்து இருந்தனர். அதைத் தொட்ர்ந்து தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டும் டால்கம் பவுடருக்கான விற்பனையை நிறுத்தி வைப்பதாக ஜான்சன்& ஜான்சன் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. டால்கம் பவுடர் என்பது மக்னீசியம் மற்றும் சிலிக்கான் சேர்க்கப்பட்ட ஒரு மென்மையான கனிமம் ஆகும்.
குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் இந்த டால்கம் பவுடரில் செயற்கையான கனிமங்கள் சேர்க்கப்படுவதால் தோல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டு அமெரிக்கா மக்களிடம் இருந்தே அதிகளவில் வைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments