மக்கள் மனதை கொள்ளையிட்ட ‘கேப்டன் ஜாக் ஸ்பாரோ‘ பிறந்தநாள்… நீங்கள் அறியாத 5 தகவல்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஹாலிவுட் சினிமாக்களில் கதாபாத்திரங்களிலேயே வாழ்ந்து ‘நடிப்பு அரக்கன்‘ என்று பெயர் பெற்றவர் ஹாலிவுட் நடிகர் ஜானி டெப். அவருடைய 60 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடும் நிலையில் ரசிகர்கள் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.
ஜானி டெப் என்ற அழைக்கப்படும் கிறிஸ்டோபர் ஜானி டெப் கெண்டக் மாகாணத்தில் உள்ள ஓவன்ஸ்போரோவில் ஜுன் 9 1963 பிறந்துள்ளார். புளோரிடா மாகாணத்தில் வளர்ந்த இவர் சிறிய வயதிலேயே இசையில் ஆர்வம் செலுத்தி வந்த நிலையில் இதற்காக 12 வயதிலேயே பள்ளிப்படிப்பையும் நிறுத்தி இருக்கிறார். இப்படி இசை மீது தீராக காதல் கொண்ட ஜானி டெப் ‘டெப் தி கிட்ஸ் இசைக்குழு’ மூலம் தனது இசை திறமையையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஆனாலும் இசையை விட நடிப்புத்தான் இவருக்கு பாதையை அமைத்துக் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் 1987 இல் “21 ஜம்ப் ஸ்ட்ரீட்” என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமானார். இதையடுத்து அவருக்கு “பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்” கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. முதலில் சாதாரணமாக கருதப்பட்ட இந்தக் கதாபாத்திரம் பின்பு ஒட்டுமொத்த கதையையும் நகர்த்திச் சென்று ஒரு கட்டத்தில் உலக பிரபலமாக மாற்றியிருக்கிறது.
காரணம் ஜானி டெப் ‘கேப்டன் ஜாக் ஸ்பாரோ‘ கேரக்டரில் கடற்கொள்ளையனாகவே வாழ்ந்திருப்பார். மேலும் அவர் பேசும் வசனங்கள் அற்புதமான நடிப்பு என்று ஹாலிவுட்டில் ஒரு வரலாற்று நாயகனாக அவரை உயர்த்தி இருக்கிறது. இதற்காக 3 அகாடமி விருதுகளையும் ஜானி டெப் வாங்கி குவித்துள்ளார்.
‘கேப்டன் ஜாக் ஸ்பாரோ‘ கேரக்டரைத் தவிர “சார்லி அண்ட் தி சாக்லேட் ஃபேக்டரி” திரைப்படத்தில் புதிரான சாக்லேட்டியர் வில்லி வொன்கா கதாபாத்திரத்திலும், “ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட்” மேட் ஹெட்டராகவும் இவர் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் “ஸ்வீனி டோட் தி டெமன் பார்பர் ஆஃப் ஃப்ளிர் ஸ்ட்ரிட்“ திரைப்படத்திலும் இவருடைய நடிப்பு பேசப்பட்ட நிலையில் பல குளோப் விருதுகளையும் ஜானி டெப் வாங்கியுள்ளார்.
இப்படி தான் நடிக்கும் கதாபாத்திரங்களிலேயே வாழ்ந்து நடிப்புக்காக புகழ்பெற்ற நடிகர் ஜானி டெப் தனது சொந்த வாழ்க்கையில் ஏராளமான சர்ச்சைகளையும் சந்தித்துள்ளார். அந்த வகையில் கடந்த 2015 இல் “பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்“ படப்பிடிப்பிற்காக ஆஸ்திரேலியா சென்றபோது தனது வளர்ப்பு நாய்களை விமானத்தில் திருட்டுத்தனமாக அழைத்துச் சென்றார் எனக் குற்றம் சாட்டப்பட்டது. கிட்டத்தட்ட 70 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட இருந்த நிலையில் ஜானி டெப் தன்னுடைய செயலுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதைத்தவிர தனது மனைவி ஆம்பர் ஹெர்டை அடித்துத் துன்புறுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. பல கட்ட விசாரணைகளுக்கு பின்பு அந்தக் குற்றச்சாட்டில் இருந்து ஜானி டெப் விலக்கப்பட்டார். இதனால் உலக அளவில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஜானி டெப் பெற்று வருவதும் குறிப்பிடத்தகக்து.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் ஜானி டெப் கலந்து கொண்டார். அதில் மைவென் இயக்கி, ஜானி டெப் நடித்திருந்த “ஜான் து பாரி“ திரைப்படம் திரையிடப்பட்ட நிலையில் அங்கிருந்த ரசிகர்கள் பிரபலங்கள் என அனைவரும் எழுந்து 7 நிமிடங்கள் வரைக்கும் கை தட்டி ஜானி டெப்பிற்கு வாழ்த்து தெரிவித்து இருந்தனர். இதனால் அவர் கண்ணீர் வடித்த படியே இருந்த புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகியது.
இப்படி நடிப்புக்காக அரக்கன் என்று கொண்டாடப்படும் நடிகர் ஜானி டெப்பின் பிறந்த நாளுக்கு நாமும் வாழ்த்துகளை பகிர்ந்து கொள்வோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments