2023ல் அதிசயம் நடக்கப்போகுது: ஜான் கொகைன் மனைவியின் மகிழ்ச்சியான பதிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பா ரஞ்சித் இயக்கிய 'சார்பாட்டா பரம்பரை’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் ஜான் கொகைன் என்பதும் இவர் தற்போது அஜித் நடித்து வரும் ’துணிவு’ படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை பூஜா ராமச்சந்திரன் என்பவரை ஜான் கொகைன் திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் தற்போது ஜான் கொகைன் மனைவி பூஜா கர்ப்பமாக இருப்பதாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில், ‘எங்களது காதல் கதை ஒரு அழியாத காவியம். இதயம் நிறைந்த சிரிப்புகள் மற்றும் பைத்தியக்காரத்தனமான சண்டைகள் அடங்கியது. முடிவில்லாத உரையாடல், காதல், காமம் மற்றும் அனைத்திலும் நாங்கள் சவாரி செய்தோம்.
இப்போது எங்களுக்கு ஒரு சிறிய அதிசயம் வரவிருப்பதை நாங்கள் ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கின்றோம். 2023 ஆம் ஆண்டு எங்களுடன் இன்னொரு நபர் இணைகிறார் என்று, தான் கர்ப்பமாக இருப்பதையும் விரைவில் குழந்தை பிறக்க இருப்பதையும் பூஜா ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com