என் மகனின் முதல் முத்தம்… உருகி நிற்கும் வில்லன் நடிகரின் க்யூட்டான புகைப்படம் வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய ‘சார்பாட்டா பரம்பரை’ திரைப்படத்தில் வேம்புலியாக வில்லன் கேரக்டரில் மிரட்டிய நடிகர் தற்போது தனது மகனின் முதல் முத்தத்தை பெற்றுவிட்டதாக புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் வில்லன் நடிகருக்குள்ளும் இத்தனை அன்பா? என்று வியந்து கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.
மலையாள சினிமாக்களில் அழுத்தமான கேரக்டரில்களில் நடித்து பிரபலமான நடிகர் ஜான் கொக்கேன் தமிழில் ‘சார்பாட்டா பரம்பரை‘ திரைப்படத்தில் வேம்புலியாக வில்லன் கேரக்டரில் நடித்து தூள் கிளப்பியிருந்தார். மேலும் ‘கேஜிஎஃப்-2‘, ‘பொய்க்கால் குதிரை‘, நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’ என்று அடுக்கடுக்கான படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார்.
தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கிவரும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல துணை நடிகை மீரா வாசுதேவனை திருமணம் செய்து விவாகரத்துப் பெற்ற இவர் கடந்த 2019 ஏப்ரலில் பிரபல விஜே பூஜா ராமச்சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். எஸ்எஸ் மியூசிக் சேனலில் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாளராக இருந்து வந்த பூஜா ஏற்கனவே சக விஜே க்ரெய்க்கை திருமணம் செய்து பின்னர் விவாகரத்துப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த இந்தத் தம்பதிகள் தொடர்ந்து கவனம் ஈர்த்து வந்தனர்.
தற்போது இந்தத் தம்பதிகளுக்கு ஏப்ரல் இறுதியில் அழகான ஆண் குழந்தை பிறந்த தகவல் வெளியாகியது. கியான் கொக்கேன் என்று பெயரிட்டு இருப்பதாகக் குறிப்பிட்ட நிலையில் ஜான் கொக்கேய்ன் முதல் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு முதல் முத்தத்தை பெற்றுவிட்டதாகவும் கூறியுள்ளார். இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும் ஜான் கொக்கேன் மற்றும் பூஜா ராமச்சந்திரனுக்கு வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com