மனைவியுடன் பாக்சிங் செய்யும் வில்லன் நடிகர்… இணையத்தை கலக்கும் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் “சார்பாட்டா பரம்பரை“. இந்தப் படத்தில் வில்லனாக “வேம்புலி“ கதாபாத்திரத்தில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் மலையாள நடிகர் ஜான் கொக்கேன். இவர் ஏற்கனவே தல அஜித் நடிப்பில் வெளியான “வீரம்“ படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் ஜான் கொக்கேன் தனது காதல் மனைவி பூஜா ரவிச்சந்திரனுடன் இணைந்து பாக்சிங் செய்யும் வகையில் வித்தியாசமான போட்டோஷுட்டை நடத்தியுள்ளார். தமிழில் பிரபல விஜேவாக இருந்தவர் பூஜா ரவிச்சந்திரன். இவர் ஏற்கனவே “பீட்சா“, “களம்“, “காதலில் சொதப்புவது எப்படி“, “காஞ்சனா 2“ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாளத்தில் “அந்தகாரம்“ எனும் திரைப்படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் ஜான் கொக்கேனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை பூஜா ரவிச்சந்திரன் தற்போது தனது கணவருடன் சுற்றுலா தளங்களுக்கு செல்வது, வொர்க் அவுட் செய்வது என பிசியாக இருந்துவருகிறார். இந்நிலையில் நடிகர் ஜான் கொக்கேன் மற்றும் நடிகை பூஜா ரவிச்சந்திரன் இருவரும் இணைந்து பாக்சிங் செய்வது போல ரிங்கிற்குள் நின்றுகொண்டு போட்டோஷுட் நடத்தியுள்ளனர்.
இதில் சினிமா ஜோடிகளைப் போலவே அவர்கள் ரொமேன்ஸ் செய்யும் புகைப்படங்களும் இடம்பெற்றிருக்கின்றன. இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் ஹீரோ- ஹீரோயினை மிஞ்சும் அளவிற்கு ரொமேன்ஸில் கலக்குறீங்க… என கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout