கிறிஸ் கெய்லை சதமடிக்க விடமாட்டேன்: 7 வருடங்களுக்கு முன்பே டுவிட் போட்ட ஆர்ச்சர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 50வது லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் கிறிஸ் கெயிலின் அபாரமான பேட்டிங் காரணமாக 185 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று 19 ஓவர்கள் முடிவில் 93 ரன்கள் எடுத்திருந்தத கிறிஸ் கெயில், சதத்தை எதிர்நோக்கி காத்திருந்தார். அப்போது 20வது ஓவரை வீச வந்த ஆர்ச்சர் பந்தில் ஒரு சிக்சர் அடித்து தனது ஸ்கோரை 99 என உயர்த்தினார். அடுத்த பந்தில் அவர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பாராதவிதமாக அவர் போல்டாகி அவுட்டானார்
இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவர் பேட்டை தூக்கி எறிந்ததும் ஆர்ச்சர் அவருக்கு ஆறுதல் கூறியதும் தெரிந்ததே. ஒரே ஒரு ரன்னில் சதத்தை நழுவவிட்டாலும் நேற்றைய போட்டியில் 1000 சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். டி20 போட்டியில் இன்னும் 1000 ரன்களே பல வீரர்கள் எடுக்காத நிலையில் கிறிஸ்கெய்ல் 1000 சிக்ஸர்கள் என்ற சாதனையை முறியடிக்க இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்பது குறிப்பிடத்தது
இந்த நிலையில் நேற்று கிறிஸ் கெயிலை சதமடிக்க விடாமல் போல்டாக்கிய ஆர்ச்சரின் ஏழு வருடங்களுக்கு முந்தைய டுவிட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. கடந்த 2013ஆம் ஆண்டில் இவர் பதிவு செய்த டுவிட்டில், ’நான் பந்து வீசும் வரை கிறிஸ் கெய்லால் சதத்தை அடிக்க முடியாது என்று பதிவு செய்துள்ளார். அவர் ஏழு வருடங்களுக்கு முன் பதிவு செய்த டுவிட் நேற்று உண்மையாகியுள்ளது
I know if I was bowling I know he wasn't getting da 100
— Jofra Archer (@JofraArcher) February 22, 2013
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com