தப்பு பண்ணா தப்பிக்க முடியாது: மீரா மிதுன் கைது குறித்து ஜோ மைக்கேல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தப்பு செய்தால் யாரும் தப்பிக்க முடியாது என நடிகையும் சூப்பர் மாடலுமான மீராமிதுன் கைது குறித்து ஜோ மைக்கல் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
நடிகையும் சூப்பர் மாடலுமான மீராமிதுன் சமீபத்தில் பட்டியல் இனத்தவர் குறித்து அவதூறாக பேசியதாக காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் மீராமிதுன் மீது 7 பிரிவுகளில் வழக்கு செய்யப்பட்டது. இந்த நிலையில் திடீரென வீடியோ ஒன்றை வெளியிட்ட மீராமிதுன் என்னை யாராலும் கைது செய்ய முடியாது என்றும் ஐந்து ஆண்டுகளாக என்னை கைது செய்ய முயற்சி செய்கிறார்கள் என்றும் ஆனால் தன்னை கைது செய்வது என்பது கனவில் தான் நடக்கும் என்றும் போலீசாருக்கு சவால் விட்டார்.
இந்த நிலையில் மீராமிதுனின் செல்போன் சிக்னலை வைத்து அவர் கேரளாவில் இருப்பதை கண்டுபிடித்த போலீசார் சில மணி நேரங்களுக்கு முன்னர் அவரை கைது செய்தனர். அதன் பின்னர் அவரை சென்னைக்கு அழைத்து வந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் மீராமிதுன் கைது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஜோ மைக்கேல் பதிவு செய்திருப்பதாவது: விஜய், சூர்யா ரசிகர்களுக்கும் மற்றும் தமிழ் மக்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி., மீரா மிதுன் கைது. கைதுக்கு முன்னர் அவரது இறுதி நாடகத்தை இந்த வீடியோவில் பார்க்கலாம். தப்பு பண்ணா தப்பிக்க முடியாது சூப்பர் மாடலின் நாடகம் முடிந்து விட்டது, கடைசியில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர் என்று கூறி மீராமிதுன் கைதுக்கு முன் செய்த வீடியோவையும் ஷேர் செய்துள்ளார்.
Happy News !!#VijaySirFans #SuryaSirFans#TamilMakkal
— JoeMichael (@RazzmatazzJoe) August 14, 2021
Final Drama Of Her Before Arrest !!
Thappu Panna Thappika Mudiyadhu??
End of Soopera Model !!
Police has to Find Out the Real Political Culprit Behind Her who Made Her to Talk Those!!#Justice Served #GAMEOVER pic.twitter.com/Fju1nMf4fy
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments