ரியோவுடன் மீண்டும் இணையும் 'ஜோ' நாயகி.. இயக்குனர், தயாரிப்பாளர் குறித்த விவரங்கள்..!

  • IndiaGlitz, [Saturday,May 04 2024]

ரியோ மற்றும் மாளவிகா மனோஜ் நடித்த ‘ஜோ’ திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் திரையரங்குகளில் மட்டுமின்றி ஓடிடியிலும் மிகப்பெரிய பார்வையாளர் எண்ணிக்கையை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மிக இயல்பான காதல் கதையை இயக்குனர் ஹரிஹரன் ராம் படமாக உருவாக்கி இருந்தார் என்பதும் எமோஷனல் காட்சிகளில் ரியோ அசத்தலாக நடித்து இருப்பார் என்பதும் குறிப்பாக மாளவிகா மனோஜ், சுசி என்ற கேரக்டரில் அசத்திருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியை எடுத்து ரியோ மற்றும் மாளவிகா மனோஜ் மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைந்துள்ளனர். டிரம்ஸ்டிக் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் ரியோ, மாளவிகா மனோஜ், விக்னேஷ் காந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அறிமுக இயக்குனர் கலையரசன் தங்கவேல் இந்த படத்தை இயக்கவுள்ளார்.

சித்துக்குமார் இசையில், மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்தின் பூஜை நேற்று நடந்த நிலையில் இந்த பூஜை குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. ‘ஜோ’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அதே ஜோடி மீண்டும் இணைவதால் இந்த படமும் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.