ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.1 லட்சம் நிதி உதவியா? வியக்க வைக்கும் புதிய அறிவிப்பு!!!

  • IndiaGlitz, [Saturday,January 16 2021]

உலகிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்காதான். இத்தகைய பாதிப்புகளை எதிர்க்கொள்ள அந்நாட்டின ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என புதிய அதிபராக பதவியேற்கும் ஜோ பைடன் தெரிவித்து உள்ளார். கொரோனா பாதிப்பால் அந்நாட்டின் வேலை இழப்பு தற்போது 1 கோடியை தாண்டி இருக்கிறது. இதனால் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் வரும் 20 ஆம் தேதி புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்கவுள்ளார். அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மென்மேலும் அதிகரித்து உயிரிழப்பும் தொடரும் நிலையில் இத்தகைய பாதிப்புகளை அதிரடியாக கையாள்வேன் என ஜோ பைடன் தெரிவித்து உள்ளார். இதனால் ஒவ்வொரு அமெரிக்க குடிமகனுக்கும் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள ரூ. 1 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த அறிவிப்பிற்கு அந்நாட்டு மக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

இத்திட்டத்திற்காக ஜோபிடன் பதவி ஏற்கவுள்ள அரசு 1.9 லட்சம் அமெரிக்க டாலர்களை செலவழிக்க இருக்கிறது. இதன் இந்திய மதிப்பு 138 லட்சத்து 811 கோடி ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் கீழ் கொரோனா பாதிப்பால் வேலையிழந்து உதவித்தொகை பெறும் ஒவ்வொரு அமெரிக்க குடிமகன்களுக்கும் 1,400 அமெரிக்க டாலர் உதவித்தொகை வழங்கப்படும். இதன் இந்திய மதிப்பு ரூ.1 லட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கொரோனாவால் வேலையிழந்து உதவித் தொகை பெறும் நபர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 300 அமெரிக்க டாலர் தொகை (ரூ.21 ஆயிரம்) இனி 400 அமெரிக்க டாலராக (ரூ.29 ஆயிரம்) உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கொரோனாவால் வேலையிழந்த மக்கள் தங்களின் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள முடியும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.