ஜோ பைடனின் கொள்ளு கொள்ளு தாத்தா சென்னையில் வாழ்ந்தாரா??? பரபரப்பை கிளப்பும் புது தகவல்!!!

  • IndiaGlitz, [Thursday,November 12 2020]

 

அமெரிக்காவின் துணை அதிபராகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் கமலா ஹாரிஸின் பெற்றோருக்கு பூர்வீகம் தமிழகம். இந்தத் தகவல் எல்லோருக்கும் தெரிந்தது. ஆனால் அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் ஜோ பைடனுக்கும் பூர்வீகம் சென்னைதான் என்ற புது தகவலை தற்போது ஊடகங்கள் கிளப்பி இருக்கின்றன. இதுகுறித்து பல்வேறு காரசாரமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஜோ பைடன் இதற்கு முன்னதாக 2 முறை அமெரிக்காவின் துணை அதிபராகப் பதவி வகித்து இருக்கிறார். அப்படி துணை அதிபராக பதவி வகித்தபோது கடந்த 2013 ஆம் ஆண்டு அவர் மும்பைக்கு வந்ததாகவும் அந்தத் தருணத்தில் என்னுடைய கொள்ளு கொள்ளு கொள்ளு தாத்தா மும்பையில் வாழ்ந்ததார் எனக் கூறியதாகவும் புதுத் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

இந்நிகழ்வு நடப்பதற்கு முன்பே ஜோ பிடன் கடந்த 1972 ஆம் ஆண்டு அமெரிக்காவின் செனட் மெம்பராகத் தேர்வானபோது மும்பையில் இருந்து ஒரு கடிதம் வந்தது என்று தெரிவித்து இருக்கிறார். அந்தக் கடிதத்தில் உங்களுடைய கொள்ளு தாத்தா கிழக்கிந்திய கம்பெனி நிறுவனக் கப்பல் ஒன்றின் கேப்டனாக இருந்தார் எனக் குறிப்பிட்டு இருந்ததாகவும் கூறியுள்ளார். அந்தக் தகவலின்படி பார்த்தால் அவருடைய முதாதையர்கள் மும்பையில் வாழ்ந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப் படுகிறது.

இப்படி ஜோ பிடனின் பூர்வீகம் மும்பையாக இருக்கலாம் என்ற தகவல் கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு பரபரப்பை கிளப்பி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவலை குறித்து லண்டன் கிங்க் கல்லூரியின் வரலாற்று பேராசிரியர் டிம் வில்லாஸே என்பவர் பல ஆய்வுகளை மேற்கொண்டதற்கு பின்பு ஜோ பிடனின் தாத்தா ஒருவேளை சென்னையில் வாழ்ந்திருக்கலாம் எனும் ஊகத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

காரணம் மும்பையில் பிடன் என்ற பெயரில் யாரோ ஒருவர் வாழ்ந்தார் எனக் குறிப்பிட்டு ஜோ பிடனுக்கு ஒரு கடிதம் வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் கிழக்கிந்திய கம்பெனியின் கப்பல் இயக்கப்பட்ட நேரத்தில் பிடன் என்ற பெயரில் கிழக்கிந்திய கம்பெனியில் 5 பேர் பணியாற்றி இருக்கின்றனர். அவர்களில் 2 பெயர்கள் மட்டுமே தற்போதைய அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் ஜோ பிடனின் குடும்பத்தோடு மிகவும் நெருங்கிப் போகிறது. அந்த 2 பேரும் சென்னையில் வாழ்ந்ததற்கான அடையாளம் கிடைத்து இருக்கிறது.

அதில் வில்லியன் ஹென்ஹி பைடன், க்ரிஸ்டோஃப்ர் பைடன் என இருவரும் சகோதரர்கள். லண்டனில் இருந்த சென்னைக்கு வந்து மூன்றாம் மற்றும் 4 நிலை கப்பல் ஊழியர்களாகப் பணியாற்றி இருக்கின்றனர். இதில் வில்லியன் டென்ஹி பைடன் தன்னுடைய பின்னாட்களில் பல கப்பல்களில் கேப்டனாக பணியாற்றி பின்பு 1843 ஆம் ஆண்டு ஓய்வுப்பெற்று தன்னுடைய 51 வயதில் ரங்கூனில் உயிரிழந்து இருக்கிறார்.

இன்னொருவர் க்ரிஸ்டோஃபர் பிடன் இவர் சென்னையில் வாழ்ந்ததற்கான அடையாளமும் சென்னையிலேயே உயிரிழந்ததற்கான அடையாளமும் கிடைத்து இருக்கிறது. இந்தத் தகவலை வைத்து வரலாற்று பேராசிரியர் டிம் வில்லாஸே கிரிஸ்டோஃபர் ஜோ பிடனின் கொள்ளு தாத்தாவாக இருக்கலாம் என ஊகிக்கிறார். கிரிஸ்டோஃபர் சென்னையில் உள்ள பல கிழக்கிந்தியக் கப்பல்களில் கேப்டனாகப் பணியாற்றி 1830 ஆம் ஆண்டு பிரின்சஸ் சார்லஸ் எனும் கப்பலில் இருந்தபோது ஓய்வுப் பெற்று லண்டனுக்கு சென்றிருக்கிறார்.

மேலும் இவருக்கு 1819 ஆம் ஆண்டு ஹரியர் ஃபீரித் எனும் பெண்ணுடன் திருமணம் நடைபெற்று இருக்கிறது. அவருக்கு பிறந்த 2 மகள்கள் மற்றும் 1 மகனுடன் கடந்த 1830 ஆம் ஆண்டு இவர் லண்டனுக்கு தன்னுடைய 41 ஆம் வயதில் சென்றிருக்கிறார். மிகச் சிறிய வதிலேயே ஓய்வுபெற வேண்டுமா என நினைத்த அவர் ஒரு புத்தகத்தை எழுதியதோடு 2 கப்பல்களை சொந்தமாக வாங்கி வாடகைக்கு விட்டதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் அதைத் தொடர்ந்து 1839 ஆம் ஆண்டு மார்ச்வி கேம்டன் எனும் கப்பலில் தனது 2 மகள்கள் மற்றும் மனைவியுடன் சென்னைக்கு திரும்பியிருக்கிறார். வரும் வழியில் உடல் நிலைக் கோளாறு காரணமாக அவரது ஒரு மகள் கப்பலிலேயே உயிரிழந்து இருக்கிறார். அப்படி சென்னைக்கு வந்த க்ரிஸ்டோஃபர் சென்னையில் 19 ஆண்டு காலம் வாழ்ந்ததாகவும் பல அறக்கட்டளைகள் கப்பல் தொடர்பான ஆலோசனைகள் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

பின்னாட்களில் அவருடைய மகன் ஹெராஷியோவும் சென்னைக்கு வந்து சேர்ந்து பல கப்பல் பணிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இப்படி வாழ்ந்து வந்த க்ரிஸ்டோஃபர் 1858 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி உயிரிழந்து விட்டார். அவரது உடல் சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள புனித ஜார்ஜ் பேராலயக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது. அவரது நினைவாக ஒரு கற்பலகையும் பேராலயத்தினுள் வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இவரை குறித்த அனைத்து குறிப்புகளும் லண்டன் கேம்ப்ரிட்ஸ் பல்கலைக கழகத்தில் வைக்கப்பட்டு இருக்கின்றன.

இந்தத் தகவல்களையும் ஜோ பிடனுக்கு 1872 ஆம் ஆண்டு வந்த கடிதத் தகவலைகளையும் வைத்து கிங்க் கல்லூரியின் வரலாற்று பேராசிரியர் டிம் வில்லாஸே தற்போது க்ரிஸ்டோஃபர்தான் இவருடைய கொள்ளு தாத்தவாக இருக்க முடியும் என்பதை உறுதியாக குறிப்பிட்டு உள்ளார். க்ரிஸ்டோஃபர் சென்னையில் பணியாற்றி சென்னையிலேயே உயிரிழந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவலை வைத்து தற்போதைய அமெரிக்க அதிபராக இருக்கப் போகும் ஜோ பிடனுக்கும் சென்னைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது எனக் கூறப்படுகிறது.

More News

காவிரி ஆற்றில் போட்டோஷூட்: இளம்ஜோடி மரணத்தில் திடுக்கிடும் தகவல்!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திருமண நிச்சயம் செய்யப்பட்ட சந்துரு மற்றும் சசிகலா ஜோடி திருமணத்திற்கு முன்னர் பிரீ போட்டோஷூட் எடுக்க முடிவு செய்து முதுகளத்தூரில் உள்ள காவிரி ஆற்றுக்கு வந்து மீனவர்

கோலிவுட்டின் ஈபிஎஸ் இவர்தான்!

தமிழகத்தை பொறுத்தவரை ஈபிஎஸ் என்றால் உடனே அனைவருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பெயர் தான் ஞாபகம் வரும்.

நவம்பர் 16ல் பள்ளிகள் திறக்கப்படுகிறதா? தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் நவம்பர் 16ம் தேதி பள்ளிகள் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும்

இந்த வாரம் ஜெயிலில் இருந்து தப்பிப்பாரா பாலா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான பாலாஜி இந்த வாரம் ஜெயிலுக்கு செல்வதில் இருந்து தப்பிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது

இசையமைப்பாளராக மாறிய ஜிப்ரானின் 6 வயது மகன்! குவியும் வாழ்த்துக்கள்!

சற்குணம் இயக்கிய 'வாகை சூட வா' என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிப்ரான் அதன் பின்னர் கமல்ஹாசனின் உத்தமவில்லன், பாபநாசம், தூங்காவனம்,